இலங்கையில் சிங்களவர்களால் நடிகர் விஜய்க்குரிய சொத்து பறிபோகும் அபாயம்?

695

தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் அவர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற காணியை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அவர்களின் மனைவி ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது உறவினர்கள் தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 15 வருடத்திற்கு முன்னர் கொழும்பு 13 கொட்டகேனா பகுதியிலிருந்த பழைய தியேட்டர் ஒன்றை விஜய் அவர்கள் மனைவியின் உறவினர் மூலம் வாங்கி விடுதியொன்றை கட்டுவதற்காக தியேட்டரை உடைத்து தரை மட்டமாக்கிய நிலையில் இன்றுவரை வெறும் நிலமாகவே இருந்துவருகிறது.

தற்போது இந்த காணிப்பகுதியை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முனைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான உண்மைகளை சம்மந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.