• Sep 21 2024

மூலோபாய நகரத்தை மீட்க்கும் உக்ரைனியப் படைகள் - பின்வாங்கும் ரஷ்யா..!

Tamil nila / Dec 28th 2022, 3:00 pm
image

Advertisement

உக்ரைனியப் படைகள் ரஷ்யாவிடமிருந்து ஒரு முக்கியமான மூலோபாய நகரத்தை மீட்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஷ்ய உக்ரைன் பிராந்தியத்தில் சண்டை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் லுஹான்ஸ்கில் உள்ள கிரெமின்னா நகரத்தை உக்ரைன் மீண்டும் கைப்பற்றலாம் என்று நம்பப்படுகிறது.


தற்போது உக்கிரமைடைந்துள்ள தாக்குதல்களால் பக்முட்,கிரெமின்னா மற்றும் டான்பாஸில் உள்ள பிற பகுதிகள் அதிக மோதல்களைக் கண்டுள்ளன.


கடந்த, திங்களன்று உக்ரைன் அதிபர் பிராந்தியத்தின் நிலைமை "கடினமானது மற்றும் வேதனையானது" என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், "தாக்குதலில் முன்னேறுவது முக்கியமாகும்.பாக்முட், கிரெமின்னா மற்றும் டான்பாஸில் உள்ள பிற பகுதிகள், அதிகபட்ச வலிமை நிறைந்த பகுதிகள் ஆகும்.


அங்குள்ள நிலைமை கடினமானது மற்றும் வேதனையானது. ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வளங்களையும் சூறையாட முயட்சிக்கின்றனர்.


ஒருவித முன்னேற்பாடுகளைச் செய்ய பயன்படுத்துகின்றனர்."என தெரிவித்தார்.


உக்ரைனியர்களின் கடுமையான அழுத்தத்தால் ரஷ்ய போராளிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், "கிரெமின நகரை இழந்தால், ரஷ்யர்களின் முழு பாதுகாப்பு வரிசையும் வீழ்ச்சியடையும் என்பதை புரிந்துகொள்கிறார்கள்.


ரஷ்ய ஆக்கிரமிப்பு துருப்புக்கள் ஒரு மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பை உருவாக்க முடிந்தது. அதை தக்கவைத்து கொள்ள, அவர்கள் பெரிய அளவிலான தாக்குதல் உபகரணங்களை அங்கு கொண்டு வருகிறார்கள்.


அவர்கள் தொடர்ந்து தங்கள் படைகளை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த வார தொடக்கத்தில், மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட விலை வரம்பிற்கு கட்டுப்படும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்வதாக ரஷ்யா அறிவித்தது,


அதே நேரத்தில் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் குண்டு வீசப்பட்ட பேய் நகரமான பாக்முட்டைச் சுற்றி கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன." என தெரிவித்தார். 

மூலோபாய நகரத்தை மீட்க்கும் உக்ரைனியப் படைகள் - பின்வாங்கும் ரஷ்யா. உக்ரைனியப் படைகள் ரஷ்யாவிடமிருந்து ஒரு முக்கியமான மூலோபாய நகரத்தை மீட்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஷ்ய உக்ரைன் பிராந்தியத்தில் சண்டை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் லுஹான்ஸ்கில் உள்ள கிரெமின்னா நகரத்தை உக்ரைன் மீண்டும் கைப்பற்றலாம் என்று நம்பப்படுகிறது.தற்போது உக்கிரமைடைந்துள்ள தாக்குதல்களால் பக்முட்,கிரெமின்னா மற்றும் டான்பாஸில் உள்ள பிற பகுதிகள் அதிக மோதல்களைக் கண்டுள்ளன.கடந்த, திங்களன்று உக்ரைன் அதிபர் பிராந்தியத்தின் நிலைமை "கடினமானது மற்றும் வேதனையானது" என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில், "தாக்குதலில் முன்னேறுவது முக்கியமாகும்.பாக்முட், கிரெமின்னா மற்றும் டான்பாஸில் உள்ள பிற பகுதிகள், அதிகபட்ச வலிமை நிறைந்த பகுதிகள் ஆகும்.அங்குள்ள நிலைமை கடினமானது மற்றும் வேதனையானது. ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வளங்களையும் சூறையாட முயட்சிக்கின்றனர்.ஒருவித முன்னேற்பாடுகளைச் செய்ய பயன்படுத்துகின்றனர்."என தெரிவித்தார்.உக்ரைனியர்களின் கடுமையான அழுத்தத்தால் ரஷ்ய போராளிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில், "கிரெமின நகரை இழந்தால், ரஷ்யர்களின் முழு பாதுகாப்பு வரிசையும் வீழ்ச்சியடையும் என்பதை புரிந்துகொள்கிறார்கள்.ரஷ்ய ஆக்கிரமிப்பு துருப்புக்கள் ஒரு மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பை உருவாக்க முடிந்தது. அதை தக்கவைத்து கொள்ள, அவர்கள் பெரிய அளவிலான தாக்குதல் உபகரணங்களை அங்கு கொண்டு வருகிறார்கள்.அவர்கள் தொடர்ந்து தங்கள் படைகளை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த வார தொடக்கத்தில், மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட விலை வரம்பிற்கு கட்டுப்படும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்வதாக ரஷ்யா அறிவித்தது,அதே நேரத்தில் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் குண்டு வீசப்பட்ட பேய் நகரமான பாக்முட்டைச் சுற்றி கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன." என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement