ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவை, மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று கட்சி அலுவலகத்தில் சந்தித்ததுடன் கட்சியில் இணைந்து கொண்டார். இதையடுத்து, அவரை கட்சியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.
1980 முதல் 2015ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை இலேசாயுத காலாற் படையணிக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, விடுதலைப் புலிகளுடனான போரில் முக்கிய பங்கு வகித்தவர்.
குறிப்பாக, நான்காம் கட்ட ஈழப் போரில் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பாரிய இராணுவ நடிவடிக்கைகளுக்கு இவர் தலைமை வகித்திருந்தார். அதில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதிகளான குடும்பி மலை (தொப்பிகல) மற்றும் வாகரை பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் தலைமை வகித்தவர்.
இதைவிட, ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளராகப் பணியாற்றிய அவர், இறுதி யுத்தத்தின் பின்னர், புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்டில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதிக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பினை சஜித் பிரேமதாச வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆலோசகராக முன்னாள் இராணுவத் தளபதியை நியமித்தார் சஜித் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவை, மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று கட்சி அலுவலகத்தில் சந்தித்ததுடன் கட்சியில் இணைந்து கொண்டார். இதையடுத்து, அவரை கட்சியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். 1980 முதல் 2015ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை இலேசாயுத காலாற் படையணிக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, விடுதலைப் புலிகளுடனான போரில் முக்கிய பங்கு வகித்தவர்.குறிப்பாக, நான்காம் கட்ட ஈழப் போரில் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பாரிய இராணுவ நடிவடிக்கைகளுக்கு இவர் தலைமை வகித்திருந்தார். அதில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதிகளான குடும்பி மலை (தொப்பிகல) மற்றும் வாகரை பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் தலைமை வகித்தவர்.இதைவிட, ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளராகப் பணியாற்றிய அவர், இறுதி யுத்தத்தின் பின்னர், புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்டில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார்.இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதிக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பினை சஜித் பிரேமதாச வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.