• Nov 10 2024

யாழில் ஆரம்பமாகவுள்ள 'இந்து சகோதரர்களின் சமர்'

Sharmi / Jun 13th 2024, 8:41 am
image

"இந்து சகோதரர்களின் சமர் "எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் நகரிலிருந்து பட்டினங்கள் நோக்கி நகரும் கிரிக்கெட் பாரம்பரியம் என இரு கல்லூரியின் அதிபர்களும்,  வியாஸ்காந் போல சர்வதேச வீரர்களை நகரத்திற்கு வெளியே இருந்து எடுத்து செல்ல இது அடித்தளமாக அமையும் எனவும் இரு அணித்தலைவர்களும் தெரிந்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் துடுப்பாட்ட சமர் குறித்து ஊடகங்களுக்கு அறிமுக சந்திப்பினனை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் சர்வேஸ்வரன் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும்  சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன பெரும் சமர் ஒன்றினை ஆரம்பிக்கின்றோம். எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த பெரும் சமர் இடம்பெறும். 

இந்து சகோதரர்களுக்கு இடையிலான சமர் என்ற பெயருடன் (battle of Hindu brother ) இடம்பெறும். இரு கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட மோதல் என்பது ஒரு  வரலாற்று நிகழ்வு முதல் தடவையாக இடம்பெறுகின்றது. 

மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன யாழ் இந்துக் கல்லூரியின் சபையின் கீழ் இயங்கிய பாடசாலைகள்.

அந்தவகையில் நாம் இருவரும் சகோதர பாடசாலைகள்.  சகோதர பாடசாலைகள் என்பதால் நாம் இந்து சகோதரர்களின் சமர் என்ற பெயரினை சூடியுள்ளோம்.இது ஒரு தொடர்ச்சியான விடயமாக இருக்க போகின்றது.

கிரிக்கெட்டினை பொறுத்தவரையில் 99 ஆம் ஆண்டுமுதல் எமது பழைய அதிபர் சந்திரசேகரா காலத்தில் ஆரம்பமாகி வளர்ச்சியடைந்து இந்த பெரும் சமரின் மூலம் இன்னும் முன்னோக்கி நகரும். 

இது கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கியமான வளர்ச்சியாக அமையும் என நான் நம்புகிறேன் . இவ்வருடம் மானிப்பாய் இந்துவிலும் வருகின்ற வருடம் சாவகச்சேரி இந்துவிலும் ஆரம்பமாகும்

மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் இளங்கோ இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

இந்த துடுப்பாட்டச் சமரினை வெற்றிகரமாக இவருடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். இந்து சகோதரர்களின் சமர் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தப் போட்டி இரண்டு நண்பர்களையும் இணைத்து நிற்கின்றது. 

எமது பாடசாலை கிரிக்கெட் உதைப்பந்தாட்டம் என்பவற்றில் பெயர் பெற்று விளங்கியது. அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொவிட் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் தற்பொழுது முன்னேற்றம் உள்ளது. எமது மாணவர்களின் கிரிக்கெட் திறனை வளர்க்க முகமாக இந்த சமரினை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

 பிக் மச்சினூடாக மாணவர்களின் திறன் இன்னும் வளர்ச்சியடையும். இவ்வருடம் முதல் இரண்டு பாடசாலைகளிலும் இந்த சமர் இடம்பெறும்.

இந்த போட்டி முதன் முறையாக 14 ஆம் திகதி காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துகல்லூரியில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 15 ஆம் திகதியும்  90 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்று தொடர்ச்சியாக 16 ஆம்  திகதி  பழைய மாணவர்களுக்கிடையிலே ஒரு நாள் சுற்று போட்டி இடம்பெற உள்ளது.

 நகரப்புறங்களில் இந்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் பட்டினங்களை நோக்கி இந்த போட்டியினை நாம் நகர்த்தி உள்ளோம். யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய்  பட்டினம் நோக்கியும், சாவகச்சேரி பட்டினம் நோக்கியும் இந்த போட்டி நகர்ந்திருப்பது வரலாற்று ரீதியாக பெருமை அளிக்கின்றது. இதற்கென விசேட கிண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி இந்துக்கல்லூரி துடுப்பாட்ட அணித்தலைவர் டினோஜன் கருத்து தெரிவிக்கையில்,

இத்தொடரிற்கு ஆதரவினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் ,பாடசாலை சமூகம் ,பழைய மாணவர்களுக்கு எமது அணியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். இந்த சமர் கிரிக்கெட்டில் சாதிக்க முனையும் வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்குவதாக அமையும்.

 இந்த போட்டியின் காரணமாக இதுவரை கிரிக்கெட்டில் நாட்டமில்லாது இருந்த பல திறமையான மாணவர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள்.முன்னைய காலத்தில் எமக்கு துடுப்பாட்டம் என்றால் என்னவென்று தெரியாது. 

அடிப்படை துடுப்பாட்டத்தில் நாம் ஈடுபடவில்லை .எவ்வாறு களதடுப்பு ,பந்து வீச்சு என அனைத்தினையும் இதன் மூலமே அறியமுடிகிறது.பலர் இன்று எமது கிரிக்கெட் வளர்ச்சியினை பதிவு செய்கின்றார்கள்.

மானிப்பாய் இந்துக்கல்லூரி அணித்தலைவர் தெய்வீகன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் சமர் ,வடக்கின் பெரும் போர் ,இந்துக்களின் சமர் ,பொன்னனிகளின் போர் என நிறைய துடுப்பாட்ட சமர்களை பார்த்து வளர்ந்தவர்கள். 

முதல் தடவையாக எமக்கு இந்து சகோதரர்களின் சமர் என்ற துடுப்பாட்ட சமனை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு இரண்டு பாடசாலை சமூகத்திற்கும் நன்றி.யாழில் முன்ணணியில் உள்ள கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இது வழி வகுக்கும்.

வேறு பாடசாலை மாணவர்களை பார்த்து நாம் மகிழச்சியடைந்மு இருகின்றோம். ஆனால் எங்களுக்கும் இப்படி ஒரு ஸ்டாராக வேண்டும் .வியாஸ்காந் அண்ணா ரி 20 உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 நகர்புறத்திற்கு வெளியே உள்ள நாங்களும் தேசிய மட்டம் வரை போகலாம் என்ற அடித்தளத்தினை இட்டுதருவது இந்த சமர் .எங்களுடைய சாதாரண விளையாட்டு நுட்பமான திறன்களை வளர்த்து கொள்ள இது காரணமாக அமைந்துள்ளது.

 அதேபோல 17 ,15 ,13 வயது பிரிவு துடுப்பாட்ட அணிக்கும் இது ஊக்கமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் ஆரம்பமாகவுள்ள 'இந்து சகோதரர்களின் சமர்' "இந்து சகோதரர்களின் சமர் "எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் நகரிலிருந்து பட்டினங்கள் நோக்கி நகரும் கிரிக்கெட் பாரம்பரியம் என இரு கல்லூரியின் அதிபர்களும்,  வியாஸ்காந் போல சர்வதேச வீரர்களை நகரத்திற்கு வெளியே இருந்து எடுத்து செல்ல இது அடித்தளமாக அமையும் எனவும் இரு அணித்தலைவர்களும் தெரிந்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில் துடுப்பாட்ட சமர் குறித்து ஊடகங்களுக்கு அறிமுக சந்திப்பினனை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தமது கருத்துக்களை பதிவு செய்தனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் சர்வேஸ்வரன் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும்  சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன பெரும் சமர் ஒன்றினை ஆரம்பிக்கின்றோம். எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த பெரும் சமர் இடம்பெறும். இந்து சகோதரர்களுக்கு இடையிலான சமர் என்ற பெயருடன் (battle of Hindu brother ) இடம்பெறும். இரு கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட மோதல் என்பது ஒரு  வரலாற்று நிகழ்வு முதல் தடவையாக இடம்பெறுகின்றது. மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன யாழ் இந்துக் கல்லூரியின் சபையின் கீழ் இயங்கிய பாடசாலைகள். அந்தவகையில் நாம் இருவரும் சகோதர பாடசாலைகள்.  சகோதர பாடசாலைகள் என்பதால் நாம் இந்து சகோதரர்களின் சமர் என்ற பெயரினை சூடியுள்ளோம்.இது ஒரு தொடர்ச்சியான விடயமாக இருக்க போகின்றது.கிரிக்கெட்டினை பொறுத்தவரையில் 99 ஆம் ஆண்டுமுதல் எமது பழைய அதிபர் சந்திரசேகரா காலத்தில் ஆரம்பமாகி வளர்ச்சியடைந்து இந்த பெரும் சமரின் மூலம் இன்னும் முன்னோக்கி நகரும். இது கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கியமான வளர்ச்சியாக அமையும் என நான் நம்புகிறேன் . இவ்வருடம் மானிப்பாய் இந்துவிலும் வருகின்ற வருடம் சாவகச்சேரி இந்துவிலும் ஆரம்பமாகும்மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் இளங்கோ இதன்போது கருத்து தெரிவிக்கையில்,இந்த துடுப்பாட்டச் சமரினை வெற்றிகரமாக இவருடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். இந்து சகோதரர்களின் சமர் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தப் போட்டி இரண்டு நண்பர்களையும் இணைத்து நிற்கின்றது. எமது பாடசாலை கிரிக்கெட் உதைப்பந்தாட்டம் என்பவற்றில் பெயர் பெற்று விளங்கியது. அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொவிட் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் தற்பொழுது முன்னேற்றம் உள்ளது. எமது மாணவர்களின் கிரிக்கெட் திறனை வளர்க்க முகமாக இந்த சமரினை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். பிக் மச்சினூடாக மாணவர்களின் திறன் இன்னும் வளர்ச்சியடையும். இவ்வருடம் முதல் இரண்டு பாடசாலைகளிலும் இந்த சமர் இடம்பெறும். இந்த போட்டி முதன் முறையாக 14 ஆம் திகதி காலை 9 மணிக்கு மானிப்பாய் இந்துகல்லூரியில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 15 ஆம் திகதியும்  90 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்று தொடர்ச்சியாக 16 ஆம்  திகதி  பழைய மாணவர்களுக்கிடையிலே ஒரு நாள் சுற்று போட்டி இடம்பெற உள்ளது. நகரப்புறங்களில் இந்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் பட்டினங்களை நோக்கி இந்த போட்டியினை நாம் நகர்த்தி உள்ளோம். யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய்  பட்டினம் நோக்கியும், சாவகச்சேரி பட்டினம் நோக்கியும் இந்த போட்டி நகர்ந்திருப்பது வரலாற்று ரீதியாக பெருமை அளிக்கின்றது. இதற்கென விசேட கிண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி இந்துக்கல்லூரி துடுப்பாட்ட அணித்தலைவர் டினோஜன் கருத்து தெரிவிக்கையில்,இத்தொடரிற்கு ஆதரவினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் ,பாடசாலை சமூகம் ,பழைய மாணவர்களுக்கு எமது அணியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். இந்த சமர் கிரிக்கெட்டில் சாதிக்க முனையும் வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்குவதாக அமையும். இந்த போட்டியின் காரணமாக இதுவரை கிரிக்கெட்டில் நாட்டமில்லாது இருந்த பல திறமையான மாணவர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள்.முன்னைய காலத்தில் எமக்கு துடுப்பாட்டம் என்றால் என்னவென்று தெரியாது. அடிப்படை துடுப்பாட்டத்தில் நாம் ஈடுபடவில்லை .எவ்வாறு களதடுப்பு ,பந்து வீச்சு என அனைத்தினையும் இதன் மூலமே அறியமுடிகிறது.பலர் இன்று எமது கிரிக்கெட் வளர்ச்சியினை பதிவு செய்கின்றார்கள்.மானிப்பாய் இந்துக்கல்லூரி அணித்தலைவர் தெய்வீகன் கருத்து தெரிவிக்கையில்,வடக்கின் சமர் ,வடக்கின் பெரும் போர் ,இந்துக்களின் சமர் ,பொன்னனிகளின் போர் என நிறைய துடுப்பாட்ட சமர்களை பார்த்து வளர்ந்தவர்கள். முதல் தடவையாக எமக்கு இந்து சகோதரர்களின் சமர் என்ற துடுப்பாட்ட சமனை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு இரண்டு பாடசாலை சமூகத்திற்கும் நன்றி.யாழில் முன்ணணியில் உள்ள கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இது வழி வகுக்கும்.வேறு பாடசாலை மாணவர்களை பார்த்து நாம் மகிழச்சியடைந்மு இருகின்றோம். ஆனால் எங்களுக்கும் இப்படி ஒரு ஸ்டாராக வேண்டும் .வியாஸ்காந் அண்ணா ரி 20 உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நகர்புறத்திற்கு வெளியே உள்ள நாங்களும் தேசிய மட்டம் வரை போகலாம் என்ற அடித்தளத்தினை இட்டுதருவது இந்த சமர் .எங்களுடைய சாதாரண விளையாட்டு நுட்பமான திறன்களை வளர்த்து கொள்ள இது காரணமாக அமைந்துள்ளது. அதேபோல 17 ,15 ,13 வயது பிரிவு துடுப்பாட்ட அணிக்கும் இது ஊக்கமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement