• Sep 10 2025

கெஹெல்பத்தர பத்மே உட்பட பாதாள உலக கும்பல்; இந்தோனேசியாவில் சிக்கிய பரபரப்புக் காட்சிகள் வெளியானது

Chithra / Sep 9th 2025, 3:40 pm
image

   

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர், கெஹெல்பத்தர பத்மே  குழு உள்ளிட்ட கும்பல் தொடர்பிலான மற்றுமொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவை பாதுகாப்பு குழு கைது செய்தமை இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கெஹெல்பத்தர பத்மே உட்பட பாதாள உலக கும்பல்; இந்தோனேசியாவில் சிக்கிய பரபரப்புக் காட்சிகள் வெளியானது    இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர், கெஹெல்பத்தர பத்மே  குழு உள்ளிட்ட கும்பல் தொடர்பிலான மற்றுமொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவை பாதுகாப்பு குழு கைது செய்தமை இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறதுஇந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement