• Apr 30 2024

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா..!samugammedia

Sharmi / May 22nd 2023, 2:10 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை முழுநிலவை முன்னிறுத்தி வரும்  கேட்டை நட்சத்திரமும் கடக லக்கினமும்   கூடிய காலை 8.00 மணி 03 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினத்தினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமாகும்.

வேளை நூல் கட்டுதல்,பொங்கல் சாடி வைத்தல், பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர்வார்க்கும் நிகழ்வும் நடைபெறும்.

நிறைவாக  விஷேட தீ பாராதனைகளுடன் பூசை இடம்பெற்று,  ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திருஉலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பாள்.

அடியார்களின் நலன் கருதி பேரூந்து வசதி மூதூரில் இருந்து நாகம்மாள் ஆலயம் வரை ஒமுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வழமை போல் ஆலயத்தில் இவ்வருடமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலய பரிபாலான சபை அறிவித்துள்ளது.

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா.samugammedia வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை முழுநிலவை முன்னிறுத்தி வரும்  கேட்டை நட்சத்திரமும் கடக லக்கினமும்   கூடிய காலை 8.00 மணி 03 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினத்தினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமாகும்.வேளை நூல் கட்டுதல்,பொங்கல் சாடி வைத்தல், பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர்வார்க்கும் நிகழ்வும் நடைபெறும்.நிறைவாக  விஷேட தீ பாராதனைகளுடன் பூசை இடம்பெற்று,  ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திருஉலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பாள்.அடியார்களின் நலன் கருதி பேரூந்து வசதி மூதூரில் இருந்து நாகம்மாள் ஆலயம் வரை ஒமுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வழமை போல் ஆலயத்தில் இவ்வருடமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலய பரிபாலான சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement