• Apr 26 2025

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

Thansita / Apr 26th 2025, 8:20 am
image

மினுவங்கொடை பத்தண்டுவன சந்தியில் இன்றையதினம்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவத்தின் போது 36 வயதுடைய நபர் காயமடைந்துள்ளதுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இரண்டு பேரினால்  இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர்  மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காயமடைந்த நபர்,  'கணேமுல்ல சஞ்சீவ'வின் சமீபத்திய கொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற புனைப்பெயரால் அறியப்படும் பாதாள உலகக் குழுவின் பள்ளி வகுப்புத் தோழர் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம் மினுவங்கொடை பத்தண்டுவன சந்தியில் இன்றையதினம்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது 36 வயதுடைய நபர் காயமடைந்துள்ளதுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இரண்டு பேரினால்  இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.சம்பவத்தில் காயமடைந்த நபர்  மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் காயமடைந்த நபர்,  'கணேமுல்ல சஞ்சீவ'வின் சமீபத்திய கொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற புனைப்பெயரால் அறியப்படும் பாதாள உலகக் குழுவின் பள்ளி வகுப்புத் தோழர் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement