• May 04 2024

ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் விச பாம்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Chithra / Dec 14th 2022, 2:32 pm
image

Advertisement


ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விச பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூல் ஒப் கெமிஸ்ட்ரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 10 கொடிய பாம்புகளின் பட்டியலில் இந்த பாம்பு முதலிடத்தை பிடித்துள்ளது.

தாய்வான் நாட்டில் உள்ள இந்த கொடிய வகை விசப்பாம்பு ஒரே நேரத்தில் 100 பேரை உயிர் இழக்க வைக்கும் அளவிற்கு கொடிய விசத்தன்மை கொண்டது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் ஏற்படும்.

ஆனால் குறித்த பாம்பு ஒருமுறை கடித்தால் 110 மில்லி கிராம் விசம் வெளிப்படும் என்றும் இந்த விசம் 100 மனிதர்களை அல்லது 250000 எலிகளைக் கொல்ல போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பாம்பு கடித்தால் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும் என்றும் கடித்த ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் கூச்ச சுபாவம் என்று கூறப்படும் இந்த பாம்பை சீண்டினால் மட்டுமே கடிக்கும் என்றும் உலகிலேயே மிக கொடுமையான விசத்தைக் கொண்ட இந்த பாம்பு தாய்வான் மற்றும் அவுஸ்திரேலிய காடுகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாம்பின் நிறம் ஒவ்வொரு பருவத்திற்கும் மாறுபடும். குளிர்காலத்தில் கருப்பாகவும் கோடை காலத்தில் மங்கலாகவும் இருக்குமென்றும் பெரிய கண்களை கொண்ட பாம்பு இது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் விச பாம்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விச பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கூல் ஒப் கெமிஸ்ட்ரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 10 கொடிய பாம்புகளின் பட்டியலில் இந்த பாம்பு முதலிடத்தை பிடித்துள்ளது.தாய்வான் நாட்டில் உள்ள இந்த கொடிய வகை விசப்பாம்பு ஒரே நேரத்தில் 100 பேரை உயிர் இழக்க வைக்கும் அளவிற்கு கொடிய விசத்தன்மை கொண்டது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் ஏற்படும்.ஆனால் குறித்த பாம்பு ஒருமுறை கடித்தால் 110 மில்லி கிராம் விசம் வெளிப்படும் என்றும் இந்த விசம் 100 மனிதர்களை அல்லது 250000 எலிகளைக் கொல்ல போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்த பாம்பு கடித்தால் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும் என்றும் கடித்த ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மிகவும் கூச்ச சுபாவம் என்று கூறப்படும் இந்த பாம்பை சீண்டினால் மட்டுமே கடிக்கும் என்றும் உலகிலேயே மிக கொடுமையான விசத்தைக் கொண்ட இந்த பாம்பு தாய்வான் மற்றும் அவுஸ்திரேலிய காடுகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த பாம்பின் நிறம் ஒவ்வொரு பருவத்திற்கும் மாறுபடும். குளிர்காலத்தில் கருப்பாகவும் கோடை காலத்தில் மங்கலாகவும் இருக்குமென்றும் பெரிய கண்களை கொண்ட பாம்பு இது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement