அமெரிக்காவில் உள்ள வடக்கு கொலராடோ வனவிலங்கு மையத்துக்கு வந்த அழைப்பில், ஒரு பாம்பு முட்டை என நினைத்து இரண்டு கோல்ஃப் பந்துகளை விழுங்கிவிட்டு வேலியோரம் செய்வதறியாது தவித்துக் கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
பாம்பின் தொண்டையில் சிக்கிய பந்துகளை மீட்க முடிந்ததா? இது குறித்து அந்த விலங்கு மீட்பு அமைப்பு தங்களது விரிவான பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறது.
அந்த பதிவில்,
இது மிக அரிதான ஒன்று, அந்த பாம்பு பந்துகளை தவறுதலாக விழுங்கியிருக்கிறது. அத்துடன் அவர்கள் பாம்பின் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர்.
அந்த பந்துகள் பாம்பின் குடலில் அடைப்பை ஏற்படுத்தியது. இது மிகத் தீவிரமான பிரச்சினை என்று அந்த அமைப்புக் கூறியுள்ளது.
பாம்பைப் பிடித்த மீட்பு குழுவினர் சில கருவிகளைப் பயன்படுத்தி அதன் தொண்டையிலிருந்து பந்தை வெளியில் எடுத்திருக்கின்றனர்.
துரிதமாக செயல்பட்டு பந்துகளை வெளியில் எடுத்ததால் சத்திரசிகிச்சை எதுவும் செய்யாமலே பாம்பைக் காப்பாற்ற முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோல்ஃப் பந்துகளை எடுத்த பின்னர் பசியிலிருந்த பாம்புக்கு மீட்புக் குழுவினர் உணவளித்துள்ளனர்.