காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வாக தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வேலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த புதிய மின்சார வேலி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பத்துடன், குறைந்த செலவில் இந்த மின்சார வேலி, உள்நாட்டு பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மின்சார வேலி எந்த நேரத்தில் உடைந்தாலும் அது கைபேசி செயலி ஒன்றின் ஊடாக குறுஞ்செய்தியாக அறியப்படுத்தும் வசதியை கொண்டுள்ளதாகவும் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு; புதிய தொழில்நுட்பத்துடன் மின்சார வேலிகள் அறிமுகம் காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வாக தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வேலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த புதிய மின்சார வேலி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பத்துடன், குறைந்த செலவில் இந்த மின்சார வேலி, உள்நாட்டு பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மின்சார வேலி எந்த நேரத்தில் உடைந்தாலும் அது கைபேசி செயலி ஒன்றின் ஊடாக குறுஞ்செய்தியாக அறியப்படுத்தும் வசதியை கொண்டுள்ளதாகவும் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.