• Apr 02 2025

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம் - மீண்டும் சர்ச்சை?

Chithra / Dec 10th 2024, 12:04 pm
image


இலங்கை நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற குறிப்பு அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து சபாநாயகரின்  கல்வித்தகமை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது கலாநிதி  என்பது அகற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தான் கலாநிதி பட்டம் பெற்றவர் என குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மையானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திலேயே இணையத்தளத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளனர்.

இந்நிலையில் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் தெரிவிக்கிறேன் என்றார்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம் - மீண்டும் சர்ச்சை இலங்கை நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற குறிப்பு அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து சபாநாயகரின்  கல்வித்தகமை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.முன்னர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது கலாநிதி  என்பது அகற்றப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அவர் தான் கலாநிதி பட்டம் பெற்றவர் என குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மையானது என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்திலேயே இணையத்தளத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளனர்.இந்நிலையில் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் தெரிவிக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement