• Nov 25 2024

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Chithra / May 1st 2024, 8:41 am
image

 

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், 

மழையினால் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழை பெய்து வருவதால் மாணவர்கள் தேர்வு மத்திய நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடம் 459,979 பரீட்சார்த்திகள் பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 

3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பொதுப் பரீட்சை தொடர்பான பயிற்றுவிப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பயிலரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு.  கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மழையினால் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மழை பெய்து வருவதால் மாணவர்கள் தேர்வு மத்திய நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.இந்த வருடம் 459,979 பரீட்சார்த்திகள் பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பொதுப் பரீட்சை தொடர்பான பயிற்றுவிப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பயிலரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement