• May 18 2024

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுப்படுத்த சர்வதேச உதவியை நாடும் இலங்கை! SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 10:15 am
image

Advertisement

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது.

பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இலங்கை அதிகாரிகள் இதனை எடுத்துரைத்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் நிதி உதவி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான பதிலுக்காக சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியம் என்றும் இலங்கை பிரதி நிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.


சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுப்படுத்த சர்வதேச உதவியை நாடும் இலங்கை SamugamMedia பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது.பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இலங்கை அதிகாரிகள் இதனை எடுத்துரைத்துள்ளனர்.இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் நிதி உதவி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான பதிலுக்காக சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியம் என்றும் இலங்கை பிரதி நிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement