• Mar 12 2025

விமானத்தில் மதுபோதையில் பாலியல் சேட்டை - கட்டுநாயக்கவில் இலங்கையர் அதிரடிக் கைது

Chithra / Mar 12th 2025, 10:21 am
image


மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பயணி அதிக மதுபோதையில், சக பயணிகளிடம் மோசமாக நடந்துகொண்டதுடன், விமான பணிப்பெண்களிடமும் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

65 வயதான குறித்த நபர், யாழ்ப்பாணம் - நைனாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிப்பவராவார். இவர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பொலிஸாருடன் சேர்ந்து வந்து பயணியைக் கைது செய்தனர்.

மேலும், பயணியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸார் பரிந்துரைத்தனர், அங்கு அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அவர் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் மதுபோதையில் பாலியல் சேட்டை - கட்டுநாயக்கவில் இலங்கையர் அதிரடிக் கைது மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பயணி அதிக மதுபோதையில், சக பயணிகளிடம் மோசமாக நடந்துகொண்டதுடன், விமான பணிப்பெண்களிடமும் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.65 வயதான குறித்த நபர், யாழ்ப்பாணம் - நைனாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிப்பவராவார். இவர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பொலிஸாருடன் சேர்ந்து வந்து பயணியைக் கைது செய்தனர்.மேலும், பயணியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸார் பரிந்துரைத்தனர், அங்கு அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.அதன்படி, அவர் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement