• May 05 2024

அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தாத ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Chithra / Dec 27th 2022, 3:01 pm
image

Advertisement

இரண்டு அரச வங்கிகளில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்ட 7,162.1 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது  என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திறைசேரி உத்தரவாதத்தின் அடிப்படையில் 2016/2017 ஆம் ஆண்டில் குறுகிய கால நிதித் தேவைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகளைப் பெற்றுள்ளது.

மேலும், 2017/2018 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முந்தைய கடன் தொகையை செலுத்தாமல் 2,944 கோடி ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020/2021 ஆம் ஆண்டில் இதே 02 அரச வங்கிகளிடம் மூன்றாவது தடவையாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, மார்ச் 31, 2021க்குள், இரண்டு அரச வங்கிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7,162.1 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.

தேசிய திறைசேரியின் உத்தரவாதத்தின் பேரில் இரண்டு அரச வங்கிகளில் இருந்து மூன்று தடவைகள் பெறப்பட்ட குறுகிய கால கடன் தொகை இன்னும் தீர்க்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரச வங்கிகளுக்கு 7,000 கோடி கடனை செலுத்தாத ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டு அரச வங்கிகளில் இருந்து குறுகிய கால கடனாக பெறப்பட்ட 7,162.1 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது  என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திறைசேரி உத்தரவாதத்தின் அடிப்படையில் 2016/2017 ஆம் ஆண்டில் குறுகிய கால நிதித் தேவைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகளைப் பெற்றுள்ளது.மேலும், 2017/2018 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முந்தைய கடன் தொகையை செலுத்தாமல் 2,944 கோடி ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2020/2021 ஆம் ஆண்டில் இதே 02 அரச வங்கிகளிடம் மூன்றாவது தடவையாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின்படி, மார்ச் 31, 2021க்குள், இரண்டு அரச வங்கிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 7,162.1 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.தேசிய திறைசேரியின் உத்தரவாதத்தின் பேரில் இரண்டு அரச வங்கிகளில் இருந்து மூன்று தடவைகள் பெறப்பட்ட குறுகிய கால கடன் தொகை இன்னும் தீர்க்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement