• Sep 21 2024

பேராதனைப் பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் இடைநிறுத்தம்!!

crownson / Dec 28th 2022, 12:10 pm
image

Advertisement

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் இருவரது மாணவர் அந்தஸ்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதான மாணவர் சங்க தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவருமே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளர், என பல்கலைக்கழக பதில் உபவேந்தர் டெரன்ஸ் மௌஜித் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், பூகற்பவியல் பேராசிரியருமான அத்துல சேனாரத்தனவையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் தாக்கி அவர்களது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்குள் சட்ட விரோதமாக உட்புகுந்து கலகம் விளைவித்த சம்பவத்திற்கும், மேற்படி இரு மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் காணப்பட்தை அடுத்தே பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர் சங்க தலைவர் சமோதி சத்சர மற்றும் முன்னாள் மாணவர் சங்க தலைவர் அனுராதா விதானகே ஆகியோரது மாணவர் அந்தஸ்த்தே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நேரம் ஏற்கனவே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 12 மாணவர்களும் நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து  ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் இடைநிறுத்தம் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் இருவரது மாணவர் அந்தஸ்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.தற்போதைய பிரதான மாணவர் சங்க தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவருமே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளனர், என பல்கலைக்கழக பதில் உபவேந்தர் டெரன்ஸ் மௌஜித் தெரிவித்தார்.பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், பூகற்பவியல் பேராசிரியருமான அத்துல சேனாரத்தனவையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் தாக்கி அவர்களது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்குள் சட்ட விரோதமாக உட்புகுந்து கலகம் விளைவித்த சம்பவத்திற்கும், மேற்படி இரு மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் காணப்பட்தை அடுத்தே பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவர் சங்க தலைவர் சமோதி சத்சர மற்றும் முன்னாள் மாணவர் சங்க தலைவர் அனுராதா விதானகே ஆகியோரது மாணவர் அந்தஸ்த்தே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதே நேரம் ஏற்கனவே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 12 மாணவர்களும் நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து  ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement