• Jun 14 2024

தோல்வியில் முடிந்த அமைதி பேச்சு வார்த்தை - மீண்டும் தீவிரமடைந்த சூடான் மோதல்..! samugammedia

Tamil nila / May 10th 2023, 3:55 pm
image

Advertisement

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  இராணுவம் மற்றும் துணை இராணுவம்  ஆகியவற்றிற்கு இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த போரினால் அப்பாவி மக்கள் உட்பட 500 ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும்

சண்டை தொடர்ந்த வண்ணமே இருந்தது. 

இதனால் சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வற்புறுத்திய நிலையில் இரு தரப்பு தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். 

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்த அமைதி பேச்சு வார்த்தை அண்மையில் சவுதி அரேபியாவில்  தொடங்கிய வேளை அதில் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. 

இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளதுடன், தலைநகர் கார்டூமில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமைதி பேச்சு வார்த்தை தொடர்பாக சவுதி அரேபியா தூதர் ஒருவர், பேச்சு வார்த்தை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் தங்களை போரில் வெல்லும் திறன் கொண்டவர்கள் என கருதுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம் எனவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தோல்வியில் முடிந்த அமைதி பேச்சு வார்த்தை - மீண்டும் தீவிரமடைந்த சூடான் மோதல். samugammedia ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  இராணுவம் மற்றும் துணை இராணுவம்  ஆகியவற்றிற்கு இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போரினால் அப்பாவி மக்கள் உட்பட 500 ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும்சண்டை தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனால் சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வற்புறுத்திய நிலையில் இரு தரப்பு தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்த அமைதி பேச்சு வார்த்தை அண்மையில் சவுதி அரேபியாவில்  தொடங்கிய வேளை அதில் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளதுடன், தலைநகர் கார்டூமில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.அமைதி பேச்சு வார்த்தை தொடர்பாக சவுதி அரேபியா தூதர் ஒருவர், பேச்சு வார்த்தை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் தங்களை போரில் வெல்லும் திறன் கொண்டவர்கள் என கருதுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம் எனவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement