• Nov 26 2024

குமுழமுனை, ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய சுப்பர் லீக் உதைபந்தாட்ட போட்டி

Anaath / Oct 10th 2024, 12:47 pm
image

குமுழமுனை சுப்பர் லீக் உதைபந்தாட்டபோட்டியின் இறுதிச் சுற்றுப்  போட்டியில்  குருந்தூர் அணிகிண்ணத்தை சுவீகரித்தது.

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ”  சுப்பர் லீக்” உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றையதினம் (09 ) மாலை குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில்  இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் குமுழமுனை கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற ”குமுழமுனை சுப்பர் லீக் போட்டியில் ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன. 

அரியாத்தை அணி, குருந்தூர் அணி, நித்தகை அணி,  மணலாறு அணி,பண்டாரவன்னியன் அணி முதலிய அணிகளாகும்.

இதில் குருந்தூர் மற்றும் பண்டாரவன்னியன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி மோதியிருந்தன. 

இறுதிப் போட்டியில் குருந்தூர் அணி தண்ட உதைமூலம் 3.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்ததை கைப்பற்றியது. 

முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற அணிக்களுக்கு பெறுமதியான வெற்றி கேடயங்களும், தொடர் ஆட்டநாயகனாக வி.திலக்சன், ஆட்டநாயகனாக க.சுதாலதன், சிறந்த கோல் காப்பாளராக தெ.சதுர்சனனுக்கும் வெற்றி கேடயங்களும், அணிகறுகளுக்கான உரிமையாளர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் இடம்பெற குமுழமுனை வாழ் புலம்பெயர்ந்த உறவுகள் முதன்மையான நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.

ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் க.சுதாலதன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில்  குமுழமுனை மத்தி கிராம அலுவலகர் சுஜினோ, கிராம அபிவிருத்தி சங்கத்தினர், ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், ஊர்வாழ் உறவுகள் , அயல்கிராம மக்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குமுழமுனை, ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய சுப்பர் லீக் உதைபந்தாட்ட போட்டி குமுழமுனை சுப்பர் லீக் உதைபந்தாட்டபோட்டியின் இறுதிச் சுற்றுப்  போட்டியில்  குருந்தூர் அணிகிண்ணத்தை சுவீகரித்தது.முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ”  சுப்பர் லீக்” உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றையதினம் (09 ) மாலை குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில்  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.மேலும் குமுழமுனை கிராமத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற ”குமுழமுனை சுப்பர் லீக் போட்டியில் ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன. அரியாத்தை அணி, குருந்தூர் அணி, நித்தகை அணி,  மணலாறு அணி,பண்டாரவன்னியன் அணி முதலிய அணிகளாகும்.இதில் குருந்தூர் மற்றும் பண்டாரவன்னியன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி மோதியிருந்தன. இறுதிப் போட்டியில் குருந்தூர் அணி தண்ட உதைமூலம் 3.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்ததை கைப்பற்றியது. முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற அணிக்களுக்கு பெறுமதியான வெற்றி கேடயங்களும், தொடர் ஆட்டநாயகனாக வி.திலக்சன், ஆட்டநாயகனாக க.சுதாலதன், சிறந்த கோல் காப்பாளராக தெ.சதுர்சனனுக்கும் வெற்றி கேடயங்களும், அணிகறுகளுக்கான உரிமையாளர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.சுற்றுப்போட்டி சிறப்பான முறையில் இடம்பெற குமுழமுனை வாழ் புலம்பெயர்ந்த உறவுகள் முதன்மையான நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் க.சுதாலதன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில்  குமுழமுனை மத்தி கிராம அலுவலகர் சுஜினோ, கிராம அபிவிருத்தி சங்கத்தினர், ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், ஊர்வாழ் உறவுகள் , அயல்கிராம மக்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement