• Nov 25 2024

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்...! விடுதலை செய்யக்கோரி இந்தியாவில் ஆரம்பமான நடைபவனி...!

Sharmi / Feb 20th 2024, 2:01 pm
image

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (20) காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி  இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் திதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,  மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்ததுடன் அதிலிருந்து இரண்டு மீன்பிடி விசைப்படகின் ஓட்டுருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒருவர் இரண்டாவது முறையாக  இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (20) காலை சுமார் 9 மணி அளவில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை தொடங்கினர்.

 ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கிய நடைபயணம் திட்டக்குடி வழியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை கடந்து ராமநாதபுரம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.

 சுமார் 600 க்கும் மேற்பட்டோர் தொடர் நடைபயணத்தில்  ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   தலைமையில் 900 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 நடைபயணத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் மீனவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.


இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள். விடுதலை செய்யக்கோரி இந்தியாவில் ஆரம்பமான நடைபவனி. இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (20) காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி  இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,  மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்ததுடன் அதிலிருந்து இரண்டு மீன்பிடி விசைப்படகின் ஓட்டுநருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒருவர் இரண்டாவது முறையாக  இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த நான்கு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று (20) காலை சுமார் 9 மணி அளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மூன்று நாள் நடை பயணத்தை தொடங்கினர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கிய நடைபயணம் திட்டக்குடி வழியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை கடந்து ராமநாதபுரம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. சுமார் 600 க்கும் மேற்பட்டோர் தொடர் நடைபயணத்தில்  ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   தலைமையில் 900 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நடைபயணத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் மீனவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement