• Mar 19 2025

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை; இலங்கைப் பொலிஸாரின் அறிவிப்பு

Chithra / Mar 18th 2025, 1:01 pm
image

 

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டும்.

எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை; இலங்கைப் பொலிஸாரின் அறிவிப்பு  உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டும்.எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement