• Nov 24 2024

போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள் - மாணவர்கள் பெரும் சிரமம்! ஸ்தம்பிதமடைந்த பாடசாலை செயற்பாடுகள்

Chithra / Jul 9th 2024, 11:21 am
image

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவாக  காணப்படுகின்றது.

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.

பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது.

போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள், அதிபர்கள் - மாணவர்கள் பெரும் சிரமம் ஸ்தம்பிதமடைந்த பாடசாலை செயற்பாடுகள் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவாக  காணப்படுகின்றது.பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement