திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் பெண்ணிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் சிறிது காலமாக ஈடுபட்டு வருவதாவும், பல பகுதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்கேதநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் பெறுமதியானது இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மினுவாங்கொடை நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண் கைது திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் பெண்ணிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் சிறிது காலமாக ஈடுபட்டு வருவதாவும், பல பகுதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்கேதநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் பெறுமதியானது இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர். மினுவாங்கொடை நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.