• May 06 2025

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்

Chithra / May 5th 2025, 8:02 am
image


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின்  தாயாராவர்.

கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர். 

கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை புத்தளம் நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் நேற்றையதினம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நுரைச்சோலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின்  தாயாராவர்.கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை புத்தளம் நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் நேற்றையதினம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நுரைச்சோலை தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement