• Jun 17 2024

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்..! samugammedia

Chithra / Oct 2nd 2023, 2:05 pm
image

Advertisement


கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.

தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.

அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

இருப்பினும்,   தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமானது.

இதேவேளை, கம்பளை மாநகர சபைக்குள் தீயணைக்கும் பிரிவு இன்மையால் இவ்வாறான சம்பவங்களின்போது  தீ பரவி  அழிவை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன.

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம். samugammedia கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இருப்பினும்,   தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமானது.இதேவேளை, கம்பளை மாநகர சபைக்குள் தீயணைக்கும் பிரிவு இன்மையால் இவ்வாறான சம்பவங்களின்போது  தீ பரவி  அழிவை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த வீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement