• Jan 15 2025

இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் திருநாள்

Chithra / Jan 14th 2025, 11:01 am
image


தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இலங்கையிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை  வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை  சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.

 கிழக்கில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் (14) வெகு விமர்சையாக நடைபெற்றது.


அத்துடன்  யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று காலை இடம்பெற்றது

முன்னாதாக காலை 5.00 மணியளவில் விசேட ஓம பூசைகள் இடம்பெற்று 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதை தொடரந்து, வல்லிபுரத்து சக்கரத்து  ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் இடம்பெற்றது. 



அத்துடன் புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

தைப்பொங்கள் திருநாளைக் கொண்டாடும் இந்து மக்கள் நீராடி புத்தாடை அணிந்து ஆலயத்திற்கு வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.


இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது. 

மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


கந்தளாயில் உள்ள சோலிஸ்ஸ வர சிவன் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கந்தளாய் சோலிஸ் வர சிவன் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதம குரு ரகுவரன் குருக்கள் தலைமையின்கீழ் விசேட பூஜைகள் நடைபெற்றன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.

இதேபோன்று இன்று அதிகாலை சிறுவர் முதல் பெரியோர் வரை பட்டாசுக்கள் வெடிக்க விட்டு வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.


மேலும் கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். 

தமிழ்ப் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் திருநாள் தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இலங்கையிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை  வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர்.அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை  சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர். கிழக்கில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் (14) வெகு விமர்சையாக நடைபெற்றது.அத்துடன்  யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று காலை இடம்பெற்றதுமுன்னாதாக காலை 5.00 மணியளவில் விசேட ஓம பூசைகள் இடம்பெற்று 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதை தொடரந்து, வல்லிபுரத்து சக்கரத்து  ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் இடம்பெற்றது. அத்துடன் புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.தைப்பொங்கள் திருநாளைக் கொண்டாடும் இந்து மக்கள் நீராடி புத்தாடை அணிந்து ஆலயத்திற்கு வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது. மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.கந்தளாயில் உள்ள சோலிஸ்ஸ வர சிவன் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.கந்தளாய் சோலிஸ் வர சிவன் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதம குரு ரகுவரன் குருக்கள் தலைமையின்கீழ் விசேட பூஜைகள் நடைபெற்றன.இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக்கொண்டனர்.இதேபோன்று இன்று அதிகாலை சிறுவர் முதல் பெரியோர் வரை பட்டாசுக்கள் வெடிக்க விட்டு வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.மேலும் கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். தமிழ்ப் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement