• Nov 28 2024

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அதிரடி...! அதிகாலையில் ஆரம்பமான வேட்டை..! முக்கிய பொருட்கள் மீட்பு...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 1:21 pm
image

புதுக்குடியிருப்பு - இடைக்கட்டு பகுதியில் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இன்று(29) அதிகாலை 3 மணியளவில் இரண்டு  கசிப்பு உற்பத்தி நிலையங்களும்  முற்றுகையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல், 810 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பினையும் அப்பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.





புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அதிரடி. அதிகாலையில் ஆரம்பமான வேட்டை. முக்கிய பொருட்கள் மீட்பு.samugammedia புதுக்குடியிருப்பு - இடைக்கட்டு பகுதியில் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.இன்று(29) அதிகாலை 3 மணியளவில் இரண்டு  கசிப்பு உற்பத்தி நிலையங்களும்  முற்றுகையிடப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல், 810 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பினையும் அப்பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement