• Jul 27 2024

'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் செயற்பாடு மூதூரில் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / May 13th 2023, 2:22 pm
image

Advertisement

பல்வேறு வலிகள் சுமந்த மூதூர் -குமாரபுரம் பகுதியில் நேற்றுமாலை(12)  மாலை 6.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

அத்தோடு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் குமாரபுரத்திற்கு வருகைதந்து கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

குமாரபுரம் சந்தியில் வைத்து வீதியால் சென்றவர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

இதன்பின்னர் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகுராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில் -

குமாரபுரம் பல்வேறு வலிகளை சந்தித்த பகுதியாகும் இங்கு இடம்பெற்ற இன படுகொலைக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும்.

சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தீர்வு கிடைக்கப்பெறவேண்டும், பௌத்த பேரினவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்பதற்காக இவ் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.



'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் செயற்பாடு மூதூரில் முன்னெடுப்பு.samugammedia பல்வேறு வலிகள் சுமந்த மூதூர் -குமாரபுரம் பகுதியில் நேற்றுமாலை(12)  மாலை 6.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. அத்தோடு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் குமாரபுரத்திற்கு வருகைதந்து கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.குமாரபுரம் சந்தியில் வைத்து வீதியால் சென்றவர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.இதன்பின்னர் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகுராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில் -குமாரபுரம் பல்வேறு வலிகளை சந்தித்த பகுதியாகும் இங்கு இடம்பெற்ற இன படுகொலைக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும்.சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தீர்வு கிடைக்கப்பெறவேண்டும், பௌத்த பேரினவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்பதற்காக இவ் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement