• Nov 26 2024

யாழில் தனியார் விடுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!

Sharmi / Oct 4th 2024, 8:36 am
image

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த  70 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வருகின்றனர். 

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். 

இந்நிலையில் அவரை  தொலைபேசியில்  அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் நேற்றையதினம் (03) மாலை குறித்த விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

குறித்த நபர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழில் தனியார் விடுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு. யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த  70 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகுறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வருகின்றனர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.இருப்பினும் கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவரை  தொலைபேசியில்  அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் நேற்றையதினம் (03) மாலை குறித்த விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.குறித்த நபர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement