இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடயம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம். இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு. இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மேற்படி விடயம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம். இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.