• May 17 2024

சிறப்பாக நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி..!

Tharun / Mar 12th 2024, 7:26 pm
image

Advertisement

சமூக சேவைகள் திணைக்களமும், முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான  உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றைய தினம்(12)  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் சிறப்பாக  நடைபெற்றது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை  சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.



 LYCA Gnanam Foundation நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும்  சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு,  BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டி மிக  சிறப்புற நடைபெற்றது 

 

 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச  விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி   வைத்திய கலாநிதி க.சுதர்சன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்,  உதவிப்பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற  வீர, வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


சிறப்பாக நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி. சமூக சேவைகள் திணைக்களமும், முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான  உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றைய தினம்(12)  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் சிறப்பாக  நடைபெற்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை  சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர். LYCA Gnanam Foundation நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும்  சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு,  BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டி மிக  சிறப்புற நடைபெற்றது   இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச  விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி   வைத்திய கலாநிதி க.சுதர்சன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்,  உதவிப்பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற  வீர, வீராங்கனைகளுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement