• Nov 25 2024

தேர்தல் பிற்போடப்படாது; அரசுக்கு எதிராக எதிரணி கற்பனையில் பிரசாரம்! நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

Chithra / Mar 24th 2024, 12:29 pm
image

 

பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தேர்தல்கள் பிற்போடப்படுமென எதிரணியினர் கற்பனையில் பிரசாரம் செய்வதாக  நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கரிசனைகள் கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, அனைத்து இனக்குழுமங்களினதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் வகையிலான முறைமையொன்று அமுல்படுத்தப்பட வேண்டியமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டே என்னால் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றம் செய்வது தொடர்பாக இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் குறித்த தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதோடு,

 எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சரவையில் என்னால் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக ‘செனட்’ சபையொன்றை அமைப்பது தொடர்பில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செனட் சபையானது ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான அங்கத்துவத்தினையும், புத்திஜீவிகளின் அங்கத்துவத்தினையும் கொண்டதாக அமையவுள்ளது.

இவ்வாறான நிலையில், தேர்தல் முறைமை மாற்றத்தின் காரணமாக, பாராளுமன்றத் தேர்தல் பிற்போடப்படும் என்று எதிரணியினர் தற்போது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவொரு யதார்த்தமற்ற கற்பனைக் கதையாகும் என்றார்.

தேர்தல் பிற்போடப்படாது; அரசுக்கு எதிராக எதிரணி கற்பனையில் பிரசாரம் நீதி அமைச்சர் குற்றச்சாட்டு  பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தேர்தல்கள் பிற்போடப்படுமென எதிரணியினர் கற்பனையில் பிரசாரம் செய்வதாக  நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கரிசனைகள் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அனைத்து இனக்குழுமங்களினதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் வகையிலான முறைமையொன்று அமுல்படுத்தப்பட வேண்டியமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டே என்னால் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றம் செய்வது தொடர்பாக இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.அந்தவகையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் குறித்த தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதோடு, எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சரவையில் என்னால் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக ‘செனட்’ சபையொன்றை அமைப்பது தொடர்பில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செனட் சபையானது ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான அங்கத்துவத்தினையும், புத்திஜீவிகளின் அங்கத்துவத்தினையும் கொண்டதாக அமையவுள்ளது.இவ்வாறான நிலையில், தேர்தல் முறைமை மாற்றத்தின் காரணமாக, பாராளுமன்றத் தேர்தல் பிற்போடப்படும் என்று எதிரணியினர் தற்போது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவொரு யதார்த்தமற்ற கற்பனைக் கதையாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement