• Jun 28 2024

வெளிநாட்டு மோகத்தால் வந்த கதி - யாழ். இளைஞனிடம் இலட்ச கணக்கில் மோசடி! சிக்கிய லண்டன் பிரஜை

Chithra / Jun 23rd 2024, 4:28 pm
image

Advertisement

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி  இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார். 

எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும், 

இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வெளிநாட்டு மோகத்தால் வந்த கதி - யாழ். இளைஞனிடம் இலட்ச கணக்கில் மோசடி சிக்கிய லண்டன் பிரஜை லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி  இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார். எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement