டெஸ்லாவில் பிறந்த முதல் குழந்தை

116

டெஸ்லா காரில் பயணித்த வேளையில் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவரே ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் காரை மாற்றி பிரசவம் பார்த்த சம்பவம் பென்சில்வேனியாவில் நடந்துள்ளது.

வாகனத்துறையில் உலகில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனம் அதன் பயணர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதில் இந்த ஆட்டோ பைலட் அமைப்பு மிகவும் பிரபலமானது. இதன் மூலம் விபத்துகளின் போது பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளது.

அந்தவகையில் பென்சில்வேனியாவில் கீட்டிங் ஷெர்ரி _ அயர்ன் ஷெர்ரி தம்பதிகள் டெஸ்லா காரில் பயணித்த வேளையில் பிரசவவலி ஏற்பட்டதனால் காரின் தன்னியக்க பைலட்டை உருவாக்கி பிரசவத்திற்கு உதவினார்.

இதன்போது அவர்களுக்கு டெஸ்லா காரில் பெண் குழந்தை பிறந்தது.