• May 29 2025

இலங்கைக்கு வருகை தரும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர்!

Chithra / May 27th 2025, 9:30 am
image

 

போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை 28 முதல் 31 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.    

ஐரோப்பிய ஒன்றிய சபையின், போலந்து தலைமைத்துவத்தின் பின்னணியில் இந்த விஜயம் நிகழ்கிறது.

இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வருகை தரும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர்  போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.நாளை 28 முதல் 31 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.    ஐரோப்பிய ஒன்றிய சபையின், போலந்து தலைமைத்துவத்தின் பின்னணியில் இந்த விஜயம் நிகழ்கிறது.இந்த விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன், அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement