• Nov 26 2024

சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் விடுதலை...!

Sharmi / May 20th 2024, 1:12 pm
image

சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20) அழைத்து வரப்பட்டு பின்னர் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பூர்-பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூரில் வைத்து குறித்த நால்வரும் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் இவர்களை விடுதலை செய்வதற்கான நகர்த்தல் பத்திரம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த  வெள்ளிக்கிழமை (17) நால்வரும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீரரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

நகர்த்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டமையால் அன்றைய தினம் சந்தேக நபர்களும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை.எனினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

சனி,ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவர்கள் இன்று மூதூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.


சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் விடுதலை. சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20) அழைத்து வரப்பட்டு பின்னர் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பூர்-பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூரில் வைத்து குறித்த நால்வரும் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களை விடுதலை செய்வதற்கான நகர்த்தல் பத்திரம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த  வெள்ளிக்கிழமை (17) நால்வரும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீரரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நகர்த்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டமையால் அன்றைய தினம் சந்தேக நபர்களும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை.எனினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.சனி,ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவர்கள் இன்று மூதூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement