• Jan 11 2025

ஜனாதிபதியால் கேள்விக்குள்ளாக்கப்படும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம்! - குற்றம்சாட்டும் தயாசிறி

Chithra / Jan 9th 2025, 8:27 am
image


வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும்.என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரம் மற்றும் உணவு மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது எவ்விதமான மாற்றமுமில்லாமல் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி உலகில் இல்லாத பொய்யை சொன்னது. அதனால் உலகில் இல்லாத வகையில் வெற்றிப் பெற்றது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம்.

அனைத்து நெருக்கடிகளுக்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது. அதற்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள் இன்று எட்கா ஒப்பந்தம் வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். 

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளின் உண்மை தன்மையை மக்களுக்கு நாங்கள் குறிப்பிட்டோம்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துக்க எதிரான நிலைப்பாட்டையே மக்கள் மத்தியில் முன்னெடுத்தது. ஆனால்  இப்போது ஐ.எம்.எப் சரணம் கச்சாமி என்று துதி பாடுகிறது.

ஜனாதிபதிக்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பிரதான வழக்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்பது சந்தேகத்துக்குரியது.

சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.  என்றார்.

ஜனாதிபதியால் கேள்விக்குள்ளாக்கப்படும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் - குற்றம்சாட்டும் தயாசிறி வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும்.என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரம் மற்றும் உணவு மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது எவ்விதமான மாற்றமுமில்லாமல் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி உலகில் இல்லாத பொய்யை சொன்னது. அதனால் உலகில் இல்லாத வகையில் வெற்றிப் பெற்றது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம்.அனைத்து நெருக்கடிகளுக்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது. அதற்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள் இன்று எட்கா ஒப்பந்தம் வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளின் உண்மை தன்மையை மக்களுக்கு நாங்கள் குறிப்பிட்டோம்.ஆனால் தேசிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துக்க எதிரான நிலைப்பாட்டையே மக்கள் மத்தியில் முன்னெடுத்தது. ஆனால்  இப்போது ஐ.எம்.எப் சரணம் கச்சாமி என்று துதி பாடுகிறது.ஜனாதிபதிக்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பிரதான வழக்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்பது சந்தேகத்துக்குரியது.சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement