• May 18 2024

இந்திய இழுவை மடிப் படகுகள் விவகாரம்...!தீர்வு இன்றேல் தொடர் போராட்டம் வெடிக்கும்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Sep 1st 2023, 3:03 pm
image

Advertisement

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவை மடிப் படகுகள் விவகாரத்திற்கு உரிய தீர்வு இன்றேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீகந்தவேல் புனிதப்பிரகாஷ் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவை மடிப் படகுகள் எல்லையினை தாண்டி அத்துமீறி எமது தொழிலாளர்களினுடைய வளங்களையும் வாழ்வாதாரங்களை சீரழித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் அதற்கெதிராக பல ஆண்டு காலமாக பல முயற்சிகளை நாங்கள்  எடுத்திருந்தும்  பல பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அத்துடன் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம்.  இருந்தபோதும் இதுவரைகாலமும் ஒரு வீதமான ஆக்கபூர்வமான தீர்வு எங்களுக்கு கிடைக்காத காரணத்தால் இன்று நாங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்திருக்கின்றோம்.

அமைதி முறையிலான இந்த ஆர்ப்பாட்டம் வெகுவிரைவில் ஒரு தீர்வை பெற்று தரவேண்டும் என்றுதான் ஜனாதிபதியிடமும், அமைச்சரிடமும் வடமாகாண ஆளுநர் மற்றும் அரச அதிபர் ,இந்திய துணை தூதுவர், இதுபோல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரிடமும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து நிற்கிறோம். உடனடியாக இதுக்குரிய தீர்வு ஒன்றை பெற்று தரவேண்டும் என்றும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் மாகாண ரீதியாகயும் மாவட்ட ரீதியாகவும் பல எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுகக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை நாங்கள் வடமாகாணத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் 15 பேர் சேர்ந்து கடல்வழியாக இந்தியா  தமிழ் நாடு சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஐயாவையும் தமிழக ஆளுநரையும் சந்தித்து உடனடியாக சென்று அழுத்தத்தை கொடுத்து எங்களுக்கான தீர்வினை நேரடியாக சென்று பெறுவதற்கு தான் நாங்கள்  அடுத்த கட்ட முயற்சி செய்வதற்கு என  நாங்க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் .

அந்தவகையில் எமது அரசாங்கம் ஊடாக ஒரு தீர்வினை எட்டலாம் என்றுதான்  நாங்கள்  வீதியில் இறங்கி போராட்டம் செய்கின்றோம். எங்களுக்கு 14, 15 நாட்களுக்குள் ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாங்கள் சொன்னது போன்று கடல் வழியாகச் சென்று அங்கே  இதுக்குரிய போராட்டத்தையும்  செய்ய வேண்டும். அடுத்தது வெகு விரைவிலே இந்தியாவின் முக்கிய பிரதிநிதி ஒருவர் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர்களிடம் ஜனாதிபதி , அமைச்சர் அதேபோல எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களுடைய தமிழர்களினுடைய பிரச்சினைகளை மனதில்  கொண்டு தமிழரின் வேதனைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக எங்களுக்கு தீர்வினை பெற்று தர வேண்டும் என்றதை நாங்கள் இதனூடாக தெரியப்படுத்துகிறோம்- என தெரிவித்தார்.

இந்திய இழுவை மடிப் படகுகள் விவகாரம்.தீர்வு இன்றேல் தொடர் போராட்டம் வெடிக்கும். விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவை மடிப் படகுகள் விவகாரத்திற்கு உரிய தீர்வு இன்றேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீகந்தவேல் புனிதப்பிரகாஷ் தெரிவித்தார்.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இழுவை மடிப் படகுகள் எல்லையினை தாண்டி அத்துமீறி எமது தொழிலாளர்களினுடைய வளங்களையும் வாழ்வாதாரங்களை சீரழித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் அதற்கெதிராக பல ஆண்டு காலமாக பல முயற்சிகளை நாங்கள்  எடுத்திருந்தும்  பல பேச்சு வார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அத்துடன் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம்.  இருந்தபோதும் இதுவரைகாலமும் ஒரு வீதமான ஆக்கபூர்வமான தீர்வு எங்களுக்கு கிடைக்காத காரணத்தால் இன்று நாங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்திருக்கின்றோம்.அமைதி முறையிலான இந்த ஆர்ப்பாட்டம் வெகுவிரைவில் ஒரு தீர்வை பெற்று தரவேண்டும் என்றுதான் ஜனாதிபதியிடமும், அமைச்சரிடமும் வடமாகாண ஆளுநர் மற்றும் அரச அதிபர் ,இந்திய துணை தூதுவர், இதுபோல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரிடமும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து நிற்கிறோம். உடனடியாக இதுக்குரிய தீர்வு ஒன்றை பெற்று தரவேண்டும் என்றும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் மாகாண ரீதியாகயும் மாவட்ட ரீதியாகவும் பல எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுகக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.அதேவேளை நாங்கள் வடமாகாணத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் 15 பேர் சேர்ந்து கடல்வழியாக இந்தியா  தமிழ் நாடு சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஐயாவையும் தமிழக ஆளுநரையும் சந்தித்து உடனடியாக சென்று அழுத்தத்தை கொடுத்து எங்களுக்கான தீர்வினை நேரடியாக சென்று பெறுவதற்கு தான் நாங்கள்  அடுத்த கட்ட முயற்சி செய்வதற்கு என  நாங்க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் . அந்தவகையில் எமது அரசாங்கம் ஊடாக ஒரு தீர்வினை எட்டலாம் என்றுதான்  நாங்கள்  வீதியில் இறங்கி போராட்டம் செய்கின்றோம். எங்களுக்கு 14, 15 நாட்களுக்குள் ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாங்கள் சொன்னது போன்று கடல் வழியாகச் சென்று அங்கே  இதுக்குரிய போராட்டத்தையும்  செய்ய வேண்டும். அடுத்தது வெகு விரைவிலே இந்தியாவின் முக்கிய பிரதிநிதி ஒருவர் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர்களிடம் ஜனாதிபதி , அமைச்சர் அதேபோல எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களுடைய தமிழர்களினுடைய பிரச்சினைகளை மனதில்  கொண்டு தமிழரின் வேதனைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக எங்களுக்கு தீர்வினை பெற்று தர வேண்டும் என்றதை நாங்கள் இதனூடாக தெரியப்படுத்துகிறோம்- என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement