• May 12 2024

ராஜா ராஜா தான்! மனம் உருகி இளையராஜா பாடலை பாடிய நபர்!!

crownson / Dec 28th 2022, 7:39 am
image

Advertisement

80ஸ், 90ஸ், 2கே என அனைத்து தலைமுறைகள் கடந்து ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா.

அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கு பிறகும் பரபரப்பான இசையமைப்பாளராக இருந்துவருகிறார்.

தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகும் ராஜமார்த்தாண்டா படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துவரும் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இளையராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்துக்கும் இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

மிழில் தற்போது இசையமைக்கும் படங்கள் குறைவாக இருக்கலாம்.

ஆனால் அவரது பாடல்கள் இல்லாமல் வெளியாகும் படங்கள் மிக குறைவு.

குறிப்பாக 2010 முதல் 2020 வரை வெளியான பெரும்பாலான படங்களில் பின்னணி இசையாக அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சுப்ரமணியபுரம், 96 போன்ற படங்கள் அதற்கு உதாரணம்.

மேலும் அவரது சூப்பர் ஹிட் பாடல்களான பேர் வச்சாலும், ரம் பம் பம் போன்ற பாடல்கள் யுவனால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டிக்கிலோனா, காபி வித் காதல் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன.

அவை YOU TUBE பில் வெளியாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

அந்த வீடியோவில் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் உள்ள பயணிகள் அனைவரும் இளையராஜா இசையில் சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த பாடலை பாடுகின்றனர்.

அதில் ஹைலெட் என்னவென்றால் அந்தப் பாடலை 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் மட்டுமல்லாது 2கே கிட்ஸும் பாடுகின்றனர்.

இளையராஜா பாடல்கள் காலத்துக்கும் நிற்பவை என்பதற்கு இந்த வீடியோ மிகச் சிறந்த உதாரணம்.

இந்த வீடியோவை இளையராஜா ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனியின் தமிழரசன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி நடித்த ARE YOU OK BABY, பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ், வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துவரும் விடுதலை, தேசிய தலைவர், வெங்கட் பிரபுவின் கஸ்டடி போன்ற பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது சர்ச்சையில் உருவாக்கியது.

அம்பேத்கர் அண்ட் மோதி என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு எழுதிய முன்னுரையில்தான்  இளையராஜா இருவரையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

அவரது பதில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தால் நினைவுகூரப்படும் ஒரு மாபெரும் மனிதர்.

அவருடைய பணிகள் மகத்துவம், நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

எல்லா சவால்களையும் கடந்து வெற்றிபெற விரும்பும் பலருக்கு அவர் ஓர் உத்வேகம்.

சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில் பெருமை பெருகின்றனர்.

அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிக்கொண்டனர்.

இருவருமே வறுமையையும் ஒடுக்க சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அதை உடைத்தெறிந்தவர்கள்.

இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள்.

ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர்.

இருவரும் செயல்படுகிற நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள் என தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டார்.

அவருடன் பி.டி. உஷா, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகயோரின் தந்தையும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இளையராாஜாவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா.

இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் அவர் மாநிலங்களவை உறுப்பினராய் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


ராஜா ராஜா தான் மனம் உருகி இளையராஜா பாடலை பாடிய நபர் 80ஸ், 90ஸ், 2கே என அனைத்து தலைமுறைகள் கடந்து ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா. அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கு பிறகும் பரபரப்பான இசையமைப்பாளராக இருந்துவருகிறார். தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகும் ராஜமார்த்தாண்டா படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துவரும் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்துக்கும் இருவரும் இணைந்து இசையமைத்தனர். தமிழில் தற்போது இசையமைக்கும் படங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவரது பாடல்கள் இல்லாமல் வெளியாகும் படங்கள் மிக குறைவு. குறிப்பாக 2010 முதல் 2020 வரை வெளியான பெரும்பாலான படங்களில் பின்னணி இசையாக அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சுப்ரமணியபுரம், 96 போன்ற படங்கள் அதற்கு உதாரணம். மேலும் அவரது சூப்பர் ஹிட் பாடல்களான பேர் வச்சாலும், ரம் பம் பம் போன்ற பாடல்கள் யுவனால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டிக்கிலோனா, காபி வித் காதல் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. அவை YOU TUBE பில் வெளியாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அந்த வீடியோவில் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் உள்ள பயணிகள் அனைவரும் இளையராஜா இசையில் சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த பாடலை பாடுகின்றனர். அதில் ஹைலெட் என்னவென்றால் அந்தப் பாடலை 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் மட்டுமல்லாது 2கே கிட்ஸும் பாடுகின்றனர். இளையராஜா பாடல்கள் காலத்துக்கும் நிற்பவை என்பதற்கு இந்த வீடியோ மிகச் சிறந்த உதாரணம். இந்த வீடியோவை இளையராஜா ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.இளையராஜா இசையில் விஜய் ஆண்டனியின் தமிழரசன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி நடித்த ARE YOU OK BABY, பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ், வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துவரும் விடுதலை, தேசிய தலைவர், வெங்கட் பிரபுவின் கஸ்டடி போன்ற பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது சர்ச்சையில் உருவாக்கியது. அம்பேத்கர் அண்ட் மோதி என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு எழுதிய முன்னுரையில்தான்  இளையராஜா இருவரையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவரது பதில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தால் நினைவுகூரப்படும் ஒரு மாபெரும் மனிதர். அவருடைய பணிகள் மகத்துவம், நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.எல்லா சவால்களையும் கடந்து வெற்றிபெற விரும்பும் பலருக்கு அவர் ஓர் உத்வேகம். சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில் பெருமை பெருகின்றனர். அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிக்கொண்டனர். இருவருமே வறுமையையும் ஒடுக்க சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அதை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவரும் செயல்படுகிற நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள் என தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.இதன் ஒரு பகுதியாக மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டார். அவருடன் பி.டி. உஷா, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகயோரின் தந்தையும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இளையராாஜாவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் அவர் மாநிலங்களவை உறுப்பினராய் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement