• May 18 2024

புதிய சட்டமூலத்தின் மூலம், ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்வதே அரசின் பிரதான நோக்கம்.! samugammedia

Chithra / Jun 13th 2023, 3:34 pm
image

Advertisement

இலங்கையில் ஊடகங்களின் குரல்வளை நசுக்கும் நோக்கில் அரசாங்கம் கொண்டு வருவதாற்கு திட்டமிட்டுள்ள உத்தேச சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எனவும், 

அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம், ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.


புதிய சட்டமூலத்தின் மூலம், ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்வதே அரசின் பிரதான நோக்கம். samugammedia இலங்கையில் ஊடகங்களின் குரல்வளை நசுக்கும் நோக்கில் அரசாங்கம் கொண்டு வருவதாற்கு திட்டமிட்டுள்ள உத்தேச சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எனவும், அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம், ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement