• May 18 2024

குடிநீர் சேவையை இடைநேரத்துடன் நிறுத்தும் வலி.மேற்கு பிரதேச சபை..! மக்கள் அந்தரிப்பு..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 2:35 pm
image

Advertisement

வலி. மேற்கு பிரதேச சபையின் குடிநீர் சேவையானது மதியம் 1 மணிக்கு முன்னர் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஆலயம் ஒன்றின் பொது நிகழ்வுக்கு, ஆலய நிர்வாகத்தினர் வலி. மேற்கு பிரதேச சபை செயலாளரிடம் குடிநீரை வழங்குமாறு கோரினர்.

இதன்போது செயலாளர் குடிநீருக்கு பொறுப்பானவரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.

அதன்பின்னர் ஆலய நிர்வாகத்தினர் குடிநீருக்கு பொறுப்பானவருக்கு அழைப்பு மேற்கொண்டு, ஆலய தேவைக்கு குடிநீர் வழங்குமாறு கோரினர். ஆனால் குறித்த பொறுப்பாளர் தண்ணீர் வழங்கும் ஊழியர்கள் தமது கடமை நேரத்தை முடித்துவிட்டு சென்றதாக கூறினார்.

குடிநீர் வழங்குபவர்களது சேவையானது காலை 6.30 தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை என அறியமுடிகிறது. ஆனால் அவர்கள் ஒரு மணிக்கே வேலையை முடித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் பிரதேச சபையின் செயலாளருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அவர்கள் அதிகாலையே சேவைக்கு வருவதாகவும் அதனால் வேளையோடு வேலையை முடித்துவிட்டு செல்வதாகவும் கூறினார். 6 மணிக்கு சேவைக்கு வந்து 8 மணத்தியாலங்கள் பணியில் ஈடுபட்டு விட்டு செல்வதாக கூறினார்.

அதற்கு ஆலய நிர்வாகத்தினர், 8 மணிக்கு பணிக்கு வந்தால் 2 மணிக்கு தானே 8 மணித்தியாலங்கள் நிறைவடையும் என கூறியபோது தடுமாறிய செயலாளர் இது குறித்து நாளை நேரில் வந்து பேசுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் செயலாளர்களின் தன்னிச்சையான ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இதனால் மக்கள் பிரதேச சபையின் மூலம் பெற்றுக் கொள்ளும் அடிப்படை வசதிகள் இன்றி அந்தரித்து வருகின்றனர்.

இது எல்லாவற்றையும் பொறுப்பு வாய்ந்தவர்கள் தெரிந்தும் தெரியாத போல் உள்ளார்களா அல்லது தெரியாமல் உள்ளார்களா என்றும், பிரதேச சபை செயலாளர்களின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

குடிநீர் சேவையை இடைநேரத்துடன் நிறுத்தும் வலி.மேற்கு பிரதேச சபை. மக்கள் அந்தரிப்பு.samugammedia வலி. மேற்கு பிரதேச சபையின் குடிநீர் சேவையானது மதியம் 1 மணிக்கு முன்னர் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,ஆலயம் ஒன்றின் பொது நிகழ்வுக்கு, ஆலய நிர்வாகத்தினர் வலி. மேற்கு பிரதேச சபை செயலாளரிடம் குடிநீரை வழங்குமாறு கோரினர். இதன்போது செயலாளர் குடிநீருக்கு பொறுப்பானவரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.அதன்பின்னர் ஆலய நிர்வாகத்தினர் குடிநீருக்கு பொறுப்பானவருக்கு அழைப்பு மேற்கொண்டு, ஆலய தேவைக்கு குடிநீர் வழங்குமாறு கோரினர். ஆனால் குறித்த பொறுப்பாளர் தண்ணீர் வழங்கும் ஊழியர்கள் தமது கடமை நேரத்தை முடித்துவிட்டு சென்றதாக கூறினார்.குடிநீர் வழங்குபவர்களது சேவையானது காலை 6.30 தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை என அறியமுடிகிறது. ஆனால் அவர்கள் ஒரு மணிக்கே வேலையை முடித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டது.அதன்பின்னர் பிரதேச சபையின் செயலாளருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அவர்கள் அதிகாலையே சேவைக்கு வருவதாகவும் அதனால் வேளையோடு வேலையை முடித்துவிட்டு செல்வதாகவும் கூறினார். 6 மணிக்கு சேவைக்கு வந்து 8 மணத்தியாலங்கள் பணியில் ஈடுபட்டு விட்டு செல்வதாக கூறினார்.அதற்கு ஆலய நிர்வாகத்தினர், 8 மணிக்கு பணிக்கு வந்தால் 2 மணிக்கு தானே 8 மணித்தியாலங்கள் நிறைவடையும் என கூறியபோது தடுமாறிய செயலாளர் இது குறித்து நாளை நேரில் வந்து பேசுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் செயலாளர்களின் தன்னிச்சையான ஆட்டம் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் பிரதேச சபையின் மூலம் பெற்றுக் கொள்ளும் அடிப்படை வசதிகள் இன்றி அந்தரித்து வருகின்றனர்.இது எல்லாவற்றையும் பொறுப்பு வாய்ந்தவர்கள் தெரிந்தும் தெரியாத போல் உள்ளார்களா அல்லது தெரியாமல் உள்ளார்களா என்றும், பிரதேச சபை செயலாளர்களின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement