• Jun 18 2024

புறொயிலர் கோழியாக மாறிவிட்ட யாழ்ப்பாண மக்கள்...!samugammedia

Sharmi / May 10th 2023, 11:14 am
image

Advertisement

வடக்கு மாகாணத்திலேயே முதன்மை மாவட்டமாக யாழ்ப்பாணத்தையே பலரும்‌ அடையாளப்படுத்துவர்‌.

கல்வியறிவு, பொருளாதாரம்‌, மக்கள் தொகை, கேந்திர முக்கியத்துவம்‌ என்று வடக்கு மாகாணத்தின்‌ தலைப் பிள்ளையாக யாழ்ப்பாணத்தைக்‌ கொண்டாடுவது வழக்கம்‌. ஆனால்‌, இந்த நிலைமை. இப்போது தலைகீழாக மாறத்‌ தொடங்கியுள்ளது. கல்வித்‌துறையில்‌ யாழ்ப்பாணம்‌ அண்மைக்காலமாக தொடர் சறுக்கல்‌களையே சந்தித்துவருகின்றது.

போதாக்குறைக்கு பொருளாதாரத்தில்‌ முன்னணியில்‌ நிற்கும்‌ யாழ்ப்பாணத்தில்தான்‌, வடக்‌கிலுள்ள ஏனைய மாவட்டங்களை விடவும்‌ போஷாக்கில்‌ குறைபாடுடைய பிள்ளைகள்‌ அதிகளவில்‌ இனங்காணப்பட்‌டுள்ளனர்‌.

அதேவேளை, வடக்கில்‌ பொருளாதார ரீதியாகப்‌ பின்தங்கிய நிலையில்‌ இருக்கும்‌ மன்னார்‌ மாவட்டத்தில்தான்‌போஷாக்குக்‌ குறைபாட்டுத்தன்மை மிகக்குறைந்தளவில்‌ பதிவாயிருக்கின்றது.
இந்தத்‌ தகவலை ஆரம்பப்பிரிவு, உதவிக்‌ கல்விப்பணிப்பாளர் சற்குணராஜா அண்மையில்‌ விழா ஒன்றில்‌ உரையாற்றும்போது வெளிப்படுத்தியுள்ளார்‌.

பொருளாதார ரீதியாக ஒப்பீட்டளவில்‌ உயர்வான நிலையில்‌ இருக்கும்‌ மாவட்டத்தைவிட, பின்தங்கிய நிலையில்‌ இருக்கும்‌ மாவட்டம்‌ எப்படி போஷாக்குத்‌ தன்மையான பிள்ளைகளைக்‌
கொண்டிருக்க முடியும்‌?

அப்படியானால்‌ பொருளாதாரத்துக்‌கும்‌ போஷாக்குக்கும்‌ தொடர்பேதுமில்லையா? இல்லாவிட்‌டால்‌ வேறேதும்‌ தவறுகள்‌ இந்த வேறுபாட்டுக்குக்‌ காரண்மா? என்ற வினாக்கள்‌ இதன்போது எழவே செய்கின்றன.

உண்‌மையில்‌, மன்னார்‌ போஷாக்கில்‌ முதன்மை நிலையை அடைவதற்கும்‌, யாழ்ப்பாணத்தில்‌ போஷாக்கின்மை அதிகரிப்பதற்‌கும்‌ மிகமுக்கியமான காரணம்‌ "நமது உணவுப் பண்பாட்டு,
முறைமையில்‌ உண்டான மாற்றமே. முற்றுமுழுதான ஒரு விவசாய மாவட்டமாக யாழ்ப்பாணம்‌ விளங்கய போது, உணவுக்காக வேறெவரையும்‌ யாழ்ப்பாணத்தவர்கள்‌. நம்பியிருக்கவில்லை.

அவர்களது விவசாய உற்பத்திக்ளைச்‌ சார்ந்ததாகவே யாழ்ப்பாண மக்களின்‌ உணவுப் பண்பாடு கட்டமைக்கப்பட்டு இருந்தது.பழஞ்சோறு முதல்‌ குரக்கன்‌ பிட்டு, ஒடியல்‌ கூழ்‌ வரை யாழ்ப்பாணத்துக்கென தனித்துவமான, சத்தான உள்ளுர் உணவுகளில் இருந்து பெறப்பட்ட உணவுக் கலாசாரம் இருந்தது.

இந்த உணவுகள்‌ யாவையுமே நிறையுண போசனைகளைக் கொண்டிருந்தன. அதனால்‌ பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் கூட வேலியில்‌ படரும்‌ முசுட்டை, குறிஞ்சா முதல் வீட்டில் வளரும் மரவெள்ளி, முருங்கை, வாழை மற்றும் பனம் பொருட்கள் என்பவற்றின் மூலம் தமது உணவினை ஆரோக்கியமாக மாற்ற முடிந்தது.

ஆனால்‌. இன்றைக்கு யாழ்ப்பாணத்து உணவு கலாசாரம் அப்படியா இருக்கின்றது? வேண்டுமானால்‌ இப்போதைய யாழ்ப்பாண உணவுக்‌ கலசாரத்தை “புறொயிலர்‌ உணவுக் கலாசாரம்' என்று சொல்லலாம்‌.

ஒருகாலத்தில்‌ பிணம்‌ சுமக்கும்‌ பாடையை அலங்கரிக்கும் தாளையும்‌ சுவரொட்டிகளையும்‌ ஒட்டுவதற்கான பசையாக மட்டுமே யாழ்ப்பாணத்தவர்களால்‌ பயன்படுத்தப்பட்ட கோதுமை மா தான்‌ இப்போது நமது எல்லா உணவு வகைகளையும்‌ ஆக்கிரமித்திருகின்றது.

ஊர்க்‌கோழி இறைச்சியைக்‌ காண்பதே அரிதாகி விட எல்லோரும்‌ வேலைப்பளுவைக்‌ குறைக்க புறொயிலர்‌ கோழியிறைச்சிக்கு மாறி, தாங்களும்‌ “புறொயிளர்களாக" மாறிவிட்டார்கள்‌.

வெளிப் பார்வைக்கு திடகாத்திரமாகத்‌ தெரிந்தாலும்‌, உண்மையில்‌ நோய்‌ எதிர்ப்புச்‌ சக்தியற்ற, அதிக தசை வளர்ச்சி கொண்ட நோஞ்சான்௧களாகவே இளைய தலைமுறை மாறிக்கொண்டிருக்‌கின்றது.

அதைவிட கொத்து ரொட்டி, பீட்ஸா, மேலைத்தேய துரித உணவு நிறுவன உற்பத்திகள்‌, நூடில்ஸ்‌ என்று ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத, சத்துக்கள்‌ அற்ற, பகட்டு உணவுக்‌ கலாசாரத்‌துக்குள்‌ யாழ்ப்பாணம்‌ மூழ்கிவிட்டது.

இதன்‌ விளைவுகளில்‌ ஒன்றுதான்‌ போஷாக்கற்ற எதிர்காலச்‌ சந்ததியின்‌ உருவாக்கம்‌ நீரிழிவு, இரத்த அழுத்தம்‌, கொலஸ்ரோல்‌, புற்றுநோய்‌ என எல்லோருமே நோயாளிகளாக, உணவை விடவும்‌ மருந்துகளையே அதிகம்‌ உட்கொள்ளும்‌ சபிக்கப்பட்ட வாழ்வியலுக்‌குள்‌ தள்ளப்பட்டமைக்கும்‌ இந்த உணவுக்‌ கலாச்‌சாரமாக மாற்றமே பெரிதும்‌ காரணம்‌.

இருப்பவர்களையும்‌ நோயாளர்களாக்கி இனிமேல் தலையெடுக்கப்பொகும் சந்ததியினரையும் தறுக்கணிக்க வைக்கும் கைங்கரியத்தையும் மாற்றத்துள்ளாக்கிவிட்ட உணவுப் பழக்கம் செவ்வனே செய்கின்றது. இதனை மிக இலகுவாக தடுக்க முடியும் மீண்டும் எமக்கென இருந்த தனித்துவமான உணவுப் பழக்க வழக்க முறைக்கு மாறுவதுதான் சரியான வழி.

இளைய சமூகத்தை நலமுள்ளதாக மாற்றப்போகின்றமா? அல்லது புறொயிலர் கோழிகளாக மாற்றப் போகின்றமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

நன்றி- உதயன்

புறொயிலர் கோழியாக மாறிவிட்ட யாழ்ப்பாண மக்கள்.samugammedia வடக்கு மாகாணத்திலேயே முதன்மை மாவட்டமாக யாழ்ப்பாணத்தையே பலரும்‌ அடையாளப்படுத்துவர்‌. கல்வியறிவு, பொருளாதாரம்‌, மக்கள் தொகை, கேந்திர முக்கியத்துவம்‌ என்று வடக்கு மாகாணத்தின்‌ தலைப் பிள்ளையாக யாழ்ப்பாணத்தைக்‌ கொண்டாடுவது வழக்கம்‌. ஆனால்‌, இந்த நிலைமை. இப்போது தலைகீழாக மாறத்‌ தொடங்கியுள்ளது. கல்வித்‌துறையில்‌ யாழ்ப்பாணம்‌ அண்மைக்காலமாக தொடர் சறுக்கல்‌களையே சந்தித்துவருகின்றது. போதாக்குறைக்கு பொருளாதாரத்தில்‌ முன்னணியில்‌ நிற்கும்‌ யாழ்ப்பாணத்தில்தான்‌, வடக்‌கிலுள்ள ஏனைய மாவட்டங்களை விடவும்‌ போஷாக்கில்‌ குறைபாடுடைய பிள்ளைகள்‌ அதிகளவில்‌ இனங்காணப்பட்‌டுள்ளனர்‌. அதேவேளை, வடக்கில்‌ பொருளாதார ரீதியாகப்‌ பின்தங்கிய நிலையில்‌ இருக்கும்‌ மன்னார்‌ மாவட்டத்தில்தான்‌போஷாக்குக்‌ குறைபாட்டுத்தன்மை மிகக்குறைந்தளவில்‌ பதிவாயிருக்கின்றது.இந்தத்‌ தகவலை ஆரம்பப்பிரிவு, உதவிக்‌ கல்விப்பணிப்பாளர் சற்குணராஜா அண்மையில்‌ விழா ஒன்றில்‌ உரையாற்றும்போது வெளிப்படுத்தியுள்ளார்‌.பொருளாதார ரீதியாக ஒப்பீட்டளவில்‌ உயர்வான நிலையில்‌ இருக்கும்‌ மாவட்டத்தைவிட, பின்தங்கிய நிலையில்‌ இருக்கும்‌ மாவட்டம்‌ எப்படி போஷாக்குத்‌ தன்மையான பிள்ளைகளைக்‌கொண்டிருக்க முடியும்‌ அப்படியானால்‌ பொருளாதாரத்துக்‌கும்‌ போஷாக்குக்கும்‌ தொடர்பேதுமில்லையா இல்லாவிட்‌டால்‌ வேறேதும்‌ தவறுகள்‌ இந்த வேறுபாட்டுக்குக்‌ காரண்மா என்ற வினாக்கள்‌ இதன்போது எழவே செய்கின்றன. உண்‌மையில்‌, மன்னார்‌ போஷாக்கில்‌ முதன்மை நிலையை அடைவதற்கும்‌, யாழ்ப்பாணத்தில்‌ போஷாக்கின்மை அதிகரிப்பதற்‌கும்‌ மிகமுக்கியமான காரணம்‌ "நமது உணவுப் பண்பாட்டு,முறைமையில்‌ உண்டான மாற்றமே. முற்றுமுழுதான ஒரு விவசாய மாவட்டமாக யாழ்ப்பாணம்‌ விளங்கய போது, உணவுக்காக வேறெவரையும்‌ யாழ்ப்பாணத்தவர்கள்‌. நம்பியிருக்கவில்லை. அவர்களது விவசாய உற்பத்திக்ளைச்‌ சார்ந்ததாகவே யாழ்ப்பாண மக்களின்‌ உணவுப் பண்பாடு கட்டமைக்கப்பட்டு இருந்தது.பழஞ்சோறு முதல்‌ குரக்கன்‌ பிட்டு, ஒடியல்‌ கூழ்‌ வரை யாழ்ப்பாணத்துக்கென தனித்துவமான, சத்தான உள்ளுர் உணவுகளில் இருந்து பெறப்பட்ட உணவுக் கலாசாரம் இருந்தது. இந்த உணவுகள்‌ யாவையுமே நிறையுண போசனைகளைக் கொண்டிருந்தன. அதனால்‌ பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் கூட வேலியில்‌ படரும்‌ முசுட்டை, குறிஞ்சா முதல் வீட்டில் வளரும் மரவெள்ளி, முருங்கை, வாழை மற்றும் பனம் பொருட்கள் என்பவற்றின் மூலம் தமது உணவினை ஆரோக்கியமாக மாற்ற முடிந்தது.ஆனால்‌. இன்றைக்கு யாழ்ப்பாணத்து உணவு கலாசாரம் அப்படியா இருக்கின்றது வேண்டுமானால்‌ இப்போதைய யாழ்ப்பாண உணவுக்‌ கலசாரத்தை “புறொயிலர்‌ உணவுக் கலாசாரம்' என்று சொல்லலாம்‌. ஒருகாலத்தில்‌ பிணம்‌ சுமக்கும்‌ பாடையை அலங்கரிக்கும் தாளையும்‌ சுவரொட்டிகளையும்‌ ஒட்டுவதற்கான பசையாக மட்டுமே யாழ்ப்பாணத்தவர்களால்‌ பயன்படுத்தப்பட்ட கோதுமை மா தான்‌ இப்போது நமது எல்லா உணவு வகைகளையும்‌ ஆக்கிரமித்திருகின்றது. ஊர்க்‌கோழி இறைச்சியைக்‌ காண்பதே அரிதாகி விட எல்லோரும்‌ வேலைப்பளுவைக்‌ குறைக்க புறொயிலர்‌ கோழியிறைச்சிக்கு மாறி, தாங்களும்‌ “புறொயிளர்களாக" மாறிவிட்டார்கள்‌.வெளிப் பார்வைக்கு திடகாத்திரமாகத்‌ தெரிந்தாலும்‌, உண்மையில்‌ நோய்‌ எதிர்ப்புச்‌ சக்தியற்ற, அதிக தசை வளர்ச்சி கொண்ட நோஞ்சான்௧களாகவே இளைய தலைமுறை மாறிக்கொண்டிருக்‌கின்றது.அதைவிட கொத்து ரொட்டி, பீட்ஸா, மேலைத்தேய துரித உணவு நிறுவன உற்பத்திகள்‌, நூடில்ஸ்‌ என்று ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத, சத்துக்கள்‌ அற்ற, பகட்டு உணவுக்‌ கலாசாரத்‌துக்குள்‌ யாழ்ப்பாணம்‌ மூழ்கிவிட்டது. இதன்‌ விளைவுகளில்‌ ஒன்றுதான்‌ போஷாக்கற்ற எதிர்காலச்‌ சந்ததியின்‌ உருவாக்கம்‌ நீரிழிவு, இரத்த அழுத்தம்‌, கொலஸ்ரோல்‌, புற்றுநோய்‌ என எல்லோருமே நோயாளிகளாக, உணவை விடவும்‌ மருந்துகளையே அதிகம்‌ உட்கொள்ளும்‌ சபிக்கப்பட்ட வாழ்வியலுக்‌குள்‌ தள்ளப்பட்டமைக்கும்‌ இந்த உணவுக்‌ கலாச்‌சாரமாக மாற்றமே பெரிதும்‌ காரணம்‌. இருப்பவர்களையும்‌ நோயாளர்களாக்கி இனிமேல் தலையெடுக்கப்பொகும் சந்ததியினரையும் தறுக்கணிக்க வைக்கும் கைங்கரியத்தையும் மாற்றத்துள்ளாக்கிவிட்ட உணவுப் பழக்கம் செவ்வனே செய்கின்றது. இதனை மிக இலகுவாக தடுக்க முடியும் மீண்டும் எமக்கென இருந்த தனித்துவமான உணவுப் பழக்க வழக்க முறைக்கு மாறுவதுதான் சரியான வழி.இளைய சமூகத்தை நலமுள்ளதாக மாற்றப்போகின்றமா அல்லது புறொயிலர் கோழிகளாக மாற்றப் போகின்றமா என்பதை சிந்திக்க வேண்டும்.நன்றி- உதயன்

Advertisement

Advertisement

Advertisement