பதுளை, ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று மண்ணில் புதையுண்ட நபரொருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் வீடொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நபர் மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேவாசிகள், பொலிஸார், தீயணைப்புப் படை வீரர்களின் ஒரு மணித்தியாலம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர் இந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட நபர் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பலத்த மழை பெய்யும் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளின் சில இடங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்ததாக தெரியவருகின்றது.
மழையினால் வீதி வழுக்கும் தன்மையில் காணப்படுவதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணில்புதையுண்ட நபர்; ஒரு மணிநேர போராட்டத்தின் பின் நடந்த சம்பவம் பதுளை, ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று மண்ணில் புதையுண்ட நபரொருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வீடொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபர் மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரதேவாசிகள், பொலிஸார், தீயணைப்புப் படை வீரர்களின் ஒரு மணித்தியாலம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர் இந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட நபர் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பலத்த மழை பெய்யும் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளின் சில இடங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்ததாக தெரியவருகின்றது.மழையினால் வீதி வழுக்கும் தன்மையில் காணப்படுவதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.