• May 04 2024

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக உருண்டைகள் விற்பனை செய்தவர் அதிரடியாக கைது..!samugammedia

mathuri / Mar 12th 2024, 9:36 pm
image

Advertisement

புத்தளம் - மதுரங்குளி கணமூலை பகுதியில் போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியத்தை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை  மதுரங்குளி பொலிஸார் இன்று (12) கைது செய்துள்ளனர்.

மதுரங்குளி , கணமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 4250 உருண்டை போதையை ஏற்படுத்தும் மோதக லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மதன மோதக உருண்டை ஒன்று சந்தைகளில் 200 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், எனினும் சந்தேக நபர் உருண்டை ஒன்று 400 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியம் உருண்டையை சந்தேக நபர் விற்பனை செய்துவந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக உருண்டைகள் விற்பனை செய்தவர் அதிரடியாக கைது.samugammedia புத்தளம் - மதுரங்குளி கணமூலை பகுதியில் போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியத்தை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை  மதுரங்குளி பொலிஸார் இன்று (12) கைது செய்துள்ளனர்.மதுரங்குளி , கணமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 4250 உருண்டை போதையை ஏற்படுத்தும் மோதக லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி மதன மோதக உருண்டை ஒன்று சந்தைகளில் 200 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், எனினும் சந்தேக நபர் உருண்டை ஒன்று 400 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியம் உருண்டையை சந்தேக நபர் விற்பனை செய்துவந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement