• Oct 06 2024

விலை குறைக்கப்பட்ட பால்மா முதலில் மேல் மாகாணத்திற்கே; இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு! வெளியான காரணம்! samugammedia

Chithra / May 14th 2023, 2:48 pm
image

Advertisement

விலை குறைக்கப்பட்டுள்ள பால் மாக்களை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அதன் பின்னரே ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

200 ரூபாவாக குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதிகளில் பொறிக்கப்படுமென்றும் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை தொடக்கம் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என அண்மையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

எனினும் ஒப்பந்தம் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் பால் மாக்களை நுகர்வோருக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பிற்கு ஒப்பிடுகையில், உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் விலையை திருத்துவார்களா என்பது குறித்து மில்கோ நிறுவனத்திடம் கேள்வி எழுப்பட்டிருந்தது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையுடன் ஒப்பிடும் போது அதன் உற்பத்திப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைவாகவே காணப்படுவதாக மில்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

400 கிராம் உள்ளுர் பால் மா பொதி சந்தையில் 950 ரூபாவிற்கு விற்கப்படுகின்ற அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை 1160 ரூபாவாக விற்கப்படுகின்றது.

அத்துடன் ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 2ஆயிரத்து 895 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


விலை குறைக்கப்பட்ட பால்மா முதலில் மேல் மாகாணத்திற்கே; இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியான காரணம் samugammedia விலை குறைக்கப்பட்டுள்ள பால் மாக்களை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அதன் பின்னரே ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.200 ரூபாவாக குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதிகளில் பொறிக்கப்படுமென்றும் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.இதேவேளை நாளை தொடக்கம் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என அண்மையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.எனினும் ஒப்பந்தம் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் பால் மாக்களை நுகர்வோருக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பிற்கு ஒப்பிடுகையில், உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் விலையை திருத்துவார்களா என்பது குறித்து மில்கோ நிறுவனத்திடம் கேள்வி எழுப்பட்டிருந்தது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையுடன் ஒப்பிடும் போது அதன் உற்பத்திப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைவாகவே காணப்படுவதாக மில்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.400 கிராம் உள்ளுர் பால் மா பொதி சந்தையில் 950 ரூபாவிற்கு விற்கப்படுகின்ற அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை 1160 ரூபாவாக விற்கப்படுகின்றது.அத்துடன் ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 2ஆயிரத்து 895 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement