• Jun 18 2024

உளவியல் ரீதியாக அச்சுறுத்திய ஓ.ஐ.சி - சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டம் தொடரும்! - சுகாஷ் samugammedia

Chithra / May 25th 2023, 4:00 pm
image

Advertisement

நாங்கள் பௌத்த மதத்திற்கோ  அல்லது சிங்களவர்களிற்கோ எதிரானவர்கள் அல்லர் என்றும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அமைக்கப்படும் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்படும் புத்த சிலைகளையும், பௌத்த விகாரைகளையுமே எதிர்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட  விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

எந்த வகையான சட்டத்தினை மீறாத போதிலும் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக குறிப்பிட்டு என்னை கைது செய்தனர். நீதிமன்ற கட்டளையில் மிகவும் தெளிவாக வழிபாட்டிற்கோ, பொது போக்குவரத்திற்கோ தடை செய்ய கூடாது என கூறப்பட்டுள்ளது. 

வலுக்கட்டாயமாக அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் என்னுடன் கைது செய்த 8 பேரையும் அழைத்து சென்ற 

ஓ.ஐ.சி ஏனையவர்களை சுதந்திரமாக விட்டதுடன், என்னை மட்டும் தனியான அறையினுள் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் வைத்திருந்தனர். 

அது மட்டுமன்றி காலை 10 மணியளவில் பலாலி பொலிஸ் நிலையத்து அழைத்து சென்றவர்கள் இரவு 10 மணி வரை என்னிடமிருந்து எந்தவொரு வாக்கு மூலத்தினையும் பெறவில்லை. 

இங்கு மட்டுமன்றி நாட்டில்  தமிழர் தாயக்கத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் எங்கு கட்டுமானம் வந்தாலும் எதிர்ப்போம். நாம் சிங்கள மக்களிற்கோ, தேரர்களிற்கோ எதிரானவர் அல்லர். 

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்படும் புத்த சிலைகளையும், விகாரைகளையுமோ  எதிர்க்கின்றோம். 

மாறாக பௌத்த மதத்தினையோ சட்டரீதியான தலதா மாளிகை, நாக விகாரை போன்றவற்றை எதிர்க்கவில்லை. 

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க வேண்டுமாயின் மக்கள் அணி திரள வேண்டும். அது மட்டுமன்றி இந்த விடயத்தில் பல ஊடகவியாளர்களிற்கு அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.  என தெரிவித்தார்.

உளவியல் ரீதியாக அச்சுறுத்திய ஓ.ஐ.சி - சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டம் தொடரும் - சுகாஷ் samugammedia நாங்கள் பௌத்த மதத்திற்கோ  அல்லது சிங்களவர்களிற்கோ எதிரானவர்கள் அல்லர் என்றும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அமைக்கப்படும் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்படும் புத்த சிலைகளையும், பௌத்த விகாரைகளையுமே எதிர்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட  விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், எந்த வகையான சட்டத்தினை மீறாத போதிலும் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக குறிப்பிட்டு என்னை கைது செய்தனர். நீதிமன்ற கட்டளையில் மிகவும் தெளிவாக வழிபாட்டிற்கோ, பொது போக்குவரத்திற்கோ தடை செய்ய கூடாது என கூறப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் என்னுடன் கைது செய்த 8 பேரையும் அழைத்து சென்ற ஓ.ஐ.சி ஏனையவர்களை சுதந்திரமாக விட்டதுடன், என்னை மட்டும் தனியான அறையினுள் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் வைத்திருந்தனர். அது மட்டுமன்றி காலை 10 மணியளவில் பலாலி பொலிஸ் நிலையத்து அழைத்து சென்றவர்கள் இரவு 10 மணி வரை என்னிடமிருந்து எந்தவொரு வாக்கு மூலத்தினையும் பெறவில்லை. இங்கு மட்டுமன்றி நாட்டில்  தமிழர் தாயக்கத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் எங்கு கட்டுமானம் வந்தாலும் எதிர்ப்போம். நாம் சிங்கள மக்களிற்கோ, தேரர்களிற்கோ எதிரானவர் அல்லர். தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்படும் புத்த சிலைகளையும், விகாரைகளையுமோ  எதிர்க்கின்றோம். மாறாக பௌத்த மதத்தினையோ சட்டரீதியான தலதா மாளிகை, நாக விகாரை போன்றவற்றை எதிர்க்கவில்லை. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க வேண்டுமாயின் மக்கள் அணி திரள வேண்டும். அது மட்டுமன்றி இந்த விடயத்தில் பல ஊடகவியாளர்களிற்கு அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.  என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement