• Jun 15 2024

பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Oct 6th 2023, 9:53 am
image

Advertisement

முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிலிருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக கடல் மார்க்கமாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த ச.டினேஸ் என்ற 33 வயதுடைய இளைஞன் என கூறப்படுகின்றது.

குறித்த இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை என்பதுடன் இளைஞனின் சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக சட்டவிரோத கடல் பயணங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி பலர் பாதிப்படைந்துவரும் நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமை கவலையளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிலிருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக கடல் மார்க்கமாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த ச.டினேஸ் என்ற 33 வயதுடைய இளைஞன் என கூறப்படுகின்றது.குறித்த இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை என்பதுடன் இளைஞனின் சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில வருடங்களாக சட்டவிரோத கடல் பயணங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி பலர் பாதிப்படைந்துவரும் நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமை கவலையளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement