• Nov 28 2024

வடக்கு, கிழக்கில் நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

Chithra / Dec 18th 2023, 4:31 pm
image

 


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைகின்றமையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையிலிருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு செல்வதன் காரணமாக நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன. 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய வடக்கு பகுதியும் , மன்னர் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கிடைக்கின்ற கனமழை மற்றும் மேலதிக மேற்பரப்பு நீர் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 54 நடுத்தர மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுவதற்றுவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பல பிரதேசங்களில் பதிவாகி இருப்பதன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வெள்ள அர்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், ஆற்றங்கரை ஓரம், குளங்கள் மற்றும் வான் பாய்கின்ற பகுதிகளுக்கு அண்மித்திருக்கின்ற மக்கள் முன்னேற்பாடாக முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

அதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைத்து வருகின்ற மழையானது நாளை பிற்பகுதியுடன் படிப்படியாக குறைவடைந்து மீண்டும் 23 ஆம் திகதியளவில் மழை வீழ்ச்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 19, 20, 22 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகுவதன் காரணமாக இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் ஒரு கனமழையை எதிர்நோக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதியும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் மீளவும் காட்டு சுழற்சிகள் தோன்றுவதற்கான வெப்பநிலை சாதகங்கள் வங்காள விரிகுடாவில் காணப்படுவதன் காரணமாக வடக்கு மாகாணம் அடுத்த ஆண்டு நுட்பகுதி வரை தொடர்ச்சியாக கன மழையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் உள்ள குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உவர்நீரை தற்சமயம் வெளியேற்றி வருகின்றது. 

இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். 

எனவே மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம். சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைகின்றமையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையிலிருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு செல்வதன் காரணமாக நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய வடக்கு பகுதியும் , மன்னர் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கிடைக்கின்ற கனமழை மற்றும் மேலதிக மேற்பரப்பு நீர் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 54 நடுத்தர மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுவதற்றுவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பல பிரதேசங்களில் பதிவாகி இருப்பதன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.வெள்ள அர்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், ஆற்றங்கரை ஓரம், குளங்கள் மற்றும் வான் பாய்கின்ற பகுதிகளுக்கு அண்மித்திருக்கின்ற மக்கள் முன்னேற்பாடாக முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.அதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைத்து வருகின்ற மழையானது நாளை பிற்பகுதியுடன் படிப்படியாக குறைவடைந்து மீண்டும் 23 ஆம் திகதியளவில் மழை வீழ்ச்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 19, 20, 22 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகுவதன் காரணமாக இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் ஒரு கனமழையை எதிர்நோக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதியும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் மீளவும் காட்டு சுழற்சிகள் தோன்றுவதற்கான வெப்பநிலை சாதகங்கள் வங்காள விரிகுடாவில் காணப்படுவதன் காரணமாக வடக்கு மாகாணம் அடுத்த ஆண்டு நுட்பகுதி வரை தொடர்ச்சியாக கன மழையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் உள்ள குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உவர்நீரை தற்சமயம் வெளியேற்றி வருகின்றது. இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். எனவே மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement