• May 18 2024

தேர்தல் ஊடாக எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை! ஹரின் கண்டுபிடிப்பு SamugamMedia

Chithra / Mar 26th 2023, 7:08 am
image

Advertisement


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை எனவும்  சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்தரப்பினரை தம்முடன் இணையுமாறும் அவர்  அழைப்பு விடுத்துள்ளார். 

அத்தோடு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த அவர் , சவாலை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ,  

அரசியலை முன்னிலைப்படுத்தியமையின் காரணமாக இதுவரை காலமும் நாம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்கவோ, சஜித் பிரேமதாசவோ சவாலை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே சவாலை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஊடாக எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை ஹரின் கண்டுபிடிப்பு SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை எனவும்  சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எனவே எதிர்தரப்பினரை தம்முடன் இணையுமாறும் அவர்  அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த அவர் , சவாலை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ,  அரசியலை முன்னிலைப்படுத்தியமையின் காரணமாக இதுவரை காலமும் நாம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்கவோ, சஜித் பிரேமதாசவோ சவாலை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.எனவே சவாலை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement