• Jan 19 2025

திருக்கோ T20 லீக் 2025 மூன்றாவது பருவ நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைத்த குகதாசன் எம்.பி

Thansita / Jan 18th 2025, 7:41 pm
image


திருக்கோ T20 லீக் 2025ல் மூன்றாவது பருவத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

திருக்கோ சூப்பர் 40 கிரிக்கெட் கிளப் இந்த போட்டியை ஒழுங்கமைக்கின்றது. இந்த பருவத்தில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடக்கம் (18,) 19, 24, 25 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

 இந்த லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 12 அணிகள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றிக்காக போட்டியிடும். 

திருக்கோ T20 லீக் 2025 கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில் 

விளையாட்டு என்பது விரும்பியபடி ஆடுவது என்று பொருள்படும். திருகோணமலை மாவட்ட வீரர்கள் மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரை தங்களது வெற்றிகளை நிலை நாட்ட வேண்டும். இதற்காக சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்குவேன்.

விளையாட்டு மூலம் உடற்பயிற்சி, உற்சாகம் என்பனவும் உடலுக்கு ஏற்படுகிறது. இதனை திறம்பட பயன்படுத்திக்  காட்ட வேண்டும் என்றார்

திருக்கோ T20 லீக் 2025 மூன்றாவது பருவ நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைத்த குகதாசன் எம்.பி திருக்கோ T20 லீக் 2025ல் மூன்றாவது பருவத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்விற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். திருக்கோ சூப்பர் 40 கிரிக்கெட் கிளப் இந்த போட்டியை ஒழுங்கமைக்கின்றது. இந்த பருவத்தில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடக்கம் (18,) 19, 24, 25 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும். இந்த லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 12 அணிகள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றிக்காக போட்டியிடும். திருக்கோ T20 லீக் 2025 கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில் விளையாட்டு என்பது விரும்பியபடி ஆடுவது என்று பொருள்படும். திருகோணமலை மாவட்ட வீரர்கள் மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரை தங்களது வெற்றிகளை நிலை நாட்ட வேண்டும். இதற்காக சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்குவேன். விளையாட்டு மூலம் உடற்பயிற்சி, உற்சாகம் என்பனவும் உடலுக்கு ஏற்படுகிறது. இதனை திறம்பட பயன்படுத்திக்  காட்ட வேண்டும் என்றார்

Advertisement

Advertisement

Advertisement