• May 05 2024

யாழில் இடம்பெற்ற திருமந்திர ஆன்மீக மாநாடு...!samugammedia

Sharmi / Oct 28th 2023, 6:11 pm
image

Advertisement

யாழ்ப்பாண பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகா சபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழில் இன்று(28)  நடைபெற்றது.

ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் திருமூலர் தினமான இன்று(28) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இதன்போது விருந்தினர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு நந்திக் கொடியும் ஏற்றி வைத்து மாநாடு இனிதே ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகம் உட்பட இந்தியாவிலிருந்தும் இந்து சமயம் சார்ந்த பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகங்களில் உள்ள ஆதீனங்களின் குருமுதல்வர்கள்,  யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சைவ சித்தாந்த மற்றும் இந்து நாகரீகத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மதத் தலைவர்கள், கல்விமான்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழில் இடம்பெற்ற திருமந்திர ஆன்மீக மாநாடு.samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகா சபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழில் இன்று(28)  நடைபெற்றது.ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் திருமூலர் தினமான இன்று(28) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.இதன்போது விருந்தினர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு நந்திக் கொடியும் ஏற்றி வைத்து மாநாடு இனிதே ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகம் உட்பட இந்தியாவிலிருந்தும் இந்து சமயம் சார்ந்த பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகங்களில் உள்ள ஆதீனங்களின் குருமுதல்வர்கள்,  யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சைவ சித்தாந்த மற்றும் இந்து நாகரீகத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மதத் தலைவர்கள், கல்விமான்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement